SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீதிபதியை விமர்சித்து வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது

2017-09-22@ 17:13:46

சென்னை: அரசு ஊழியர்களின் போராட்டத்தை கண்டித்த நீதிபதியை விமர்சித்ததாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ் சந்திரபோஸ், சென்னையை அடுத்துள்ள பெருங்களத்தூரை சேர்ந்தவர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது அரசு ஊழியர்களை எச்சரித்த நீதிபதி கிருபாகரனை விமர்சனம் செய்தார் என்பது அவர் மீதுள்ள குற்றச்சாட்டு. நீதிபதியையும் அவரது உத்தரவையும் விமர்சித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது புகாராகும்.

மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் சுபாஷ் சந்திரபோஸை கைத செய்துள்ளனர். நீதிபதிகள் மீதான விமர்சனம் குறித்த வழக்கு விசாரணையின்போது இதனை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். நீதிபதிபகளை விமர்சித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

  • karanisvararfestival

    மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

  • cmathleticstale

    மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

  • tiruchurpooram

    கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்