SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகின் பணக்கார பெண்மனி லில்லியன் பெட்டென்கார்ட், 94வது வயதில் மரணம்!

2017-09-22@ 16:40:45

பாரீஸ்: உலகின் முதல் பணக்கார பெண்மனியான லில்லியன் பெட்டென்கார்ட் வயது முதிர்ச்சி காரணமாக காலமானார். அவருக்கு வயது 94 ஆகும். பாரிஸில் தனது வீட்டினில் வியாழக்கிழமை அதிகாலையில் லில்லியன் பெட்டென்கார்ட் இறந்ததாக அவரது மகள் பெட்டென்ஸ்கார்ட்-மேயர்ஸ் உறுதிபடுத்தியுள்ளார். இந்த ஆண்டு தொடக்‍கத்தில் வெளியான ஃபோர்பஸ் நிறுவனத்தின் அறிக்கையின்படி,. உலக பணக்காரர் பட்டியலில் 14ம் இடத்தில் இருந்தவர் லில்லியன் பெட்டென்கார்ட்.

அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் முதன்மை பங்குதாரராக இருந்த லில்லியன் பெட்டென்கார்ட் உலகின் பணக்கார பெண்மணியாக கருதப்பட்டார். இந்நிலையில், வயது முதிர்ச்சி காரணமாக நேற்று லில்லியன் பெட்டென்கார்ட் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டிற்கு பின்னர் இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் கருத்தின்படி, பெட்டென்கார்ட் 39.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்