SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரங்கிமலையில் பிரபல பள்ளியின் தாளாளர் - ஆசிரியை நெருக்கம்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் போட்டோக்களால் பரபரப்பு

2017-09-21@ 00:38:35

சென்னை : சென்னை பரங்கிமலையில் தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பிரபலமான பள்ளி என்பதால் பெரிய பணக்காரர்களின் குழந்தைகள்தான் படித்து வருகின்றனர்.
இங்கு இடம் கிடைப்பதே மிக அரிது. அப்படி போட்டி நிறைந்த இந்த பள்ளியின் தாளாளர் ஒருவர் ஆசிரியையுடன் பள்ளியின் அலுவலக அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தற்போது இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பள்ளி தாளாளரும், ஆசிரியையும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து முத்தமிட்டு கொள்ளும் காட்சியை செல்பியாக எடுத்துள்ளனரா அல்லது வேறு யாராவது எடுத்து அதை சமூக வலை தளங்களில் பரப்பினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அந்த ஆசிரியையும் மறுப்பு தெரிவிக்காமல் அவருடன் சிரித்த முகத்துடனே முத்தங்களை பரிமாறிக் கொள்வதால் ஏற்கனவே இருவருக்கும் தொடர்பு இருக்கும் என்றே தெரிகிறது. ஆனால், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற காரியங்களில் தாளாளரும், ஆசிரியையும் ஈடுபட்டு அதை செல்போனில் பதிவு செய்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இந்த புகைப்படங்கள் அனைத்தும் மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருவதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாளாளரின் இந்த காம லீலைகள் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.

தாளாளர் மற்றும் ஆசிரியையிடம் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தொடர்பாக பலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டது என்றும், மற்றவர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தும் பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என்றாலும், போலீசார் விசாரணை நடத்தி அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர். பள்ளியின் தாளாளர் தற்போது பரங்கிமலையில் உள்ள ஒரு தேவாலயத்தின் பாதிரியாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்