SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் 2 லட்சம் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கம்

2017-09-14@ 14:42:13

டெல்லி : கருப்பு பணத்தை ஒழிக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு அம்சமாக 2 லட்சம் போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கருப்பு பணத்தை வெள்ளையாக்க இத்தகைய போலி நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது போன்ற நிறுவனங்களின் முதலீடு சில லட்சங்கள் கூட இருக்காது, ஆனால் பலகோடி ரூபாயை கடனாக பெற்று பினாமி நிறுவனங்களுக்கு மறு கடனாக வழங்கும்

மற்றபடி வியாபாரம், உற்பத்தி எதுவும் செய்து இருக்காது. நிறுவன சட்டம் படி அனைத்து நிறுவனங்களுக்கு ஆண்டு கணக்கு வழக்குகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இத்தகைய போலி நிறுவனங்கள் கணக்குகளை சமர்ப்பித்து இருக்காது. பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் திரட்டப்படும் கருப்பு பணத்தை இத்தகைய போலி நிறுவனங்கள் மூலம் கைமாற்றி ஒரு கட்டத்தில் வெள்ளையாக மாற்றும் செயல் இதுவரை நடந்து வந்தது.

பணநீக்க நடவடிக்கைக்கு பிறகு நாடு முழுவதும் வங்கி கணக்குகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 2,09,032 நிறுவனங்களின் கணக்குகள் சந்தேகத்திற்கு உரியவையாக இருந்ததால் முடக்கப்பட்டன. அந்த நிறுவனத்தில் இயக்குனராக இருக்கும் 3 லட்சம் நபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் இனி வேறு நிறுவனங்களில் இயக்குனர்களாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் போலி நிறுவனங்களை துவக்கி கருப்பு பணத்தை பதுக்குபவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்