SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்வு

2017-09-14@ 10:58:57

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஐந்து நாள் வர்த்தகத்தில் குறியீடு 524.44 புள்ளிகளாக அதிகரித்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 120.62 புள்ளிகள் உயர்ந்து 32,307.036 புள்ளிகளாக உள்ளது. சுகாதாரம், எண்ணெய் & எரிவாயு, மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 1.63% வரை அதிகரித்து காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38.75 புள்ளிகள் அதிகரித்து 10,118.05 புள்ளிகளாக உள்ளது.

சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி லூபின், டாக்டர் ரெட்டிஸ், சிபலா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ மற்றும் அதானி துறைமுகங்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருந்தது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.08%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.36% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.04% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.18% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்