SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபோன் எக்ஸ் விலை இந்தியாவில் 39% அதிகம்

2017-09-14@ 00:22:34

நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய ஐபோன் எக்ஸ் (ரோமன் எழுத்தில் 10 என்பதை குறிக்கிறது) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு வித போன் மெமரியுடன் கிடைக்கிறது. முகத்தை பாஸ்வேர்டாக வைத்து போனை திறத்தல், போன் விளிம்பு வரை தொடுதிரை கொண்ட நவீன 5.8 அங்குல டிஸ்பிளே, இரட்டை கேமரா, தண்ணீர் மற்றும் தூசுகளில் இருந்து பாதுகாக்கும் வடிவமைப்பு என பல நவீன அம்சங்களை இந்த 10வது பதிப்பு கொண்டுள்ளது.

இதன் 64 ஜிபி மாடல் விலை அமெரிக்காவில் 999 டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 64,000. எனினும், இந்தியாவில் இதன் விலை 89,000 என புளூம்பெர்க் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் விலை  39% (சுமார் ₹25,000) அதிகம் இருக்கும். இதுபோல் இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் அமெரிக்காவை விட அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என புளூம்பெர்க் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்