SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையால் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்கிறது

2017-09-14@ 00:22:30

கோவை: கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால், சின்ன வெங்காயம் போதிய வளர்ச்சி இல்லாமலே அழுகிய நிலையில் அறுவடையாகி வருகிறது. இதனால் இதன் விலை உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த ஜூலை மாதத்தில் கிலோ 90 வரை விற்றது. பின்னர் கடந்த மாதம் துவக்கத்தில் முதல் ரகம் 60க்கும், இரண்டாம் ரகம் 50க்கும் குறைந்தது. பின்னர் கடந்த மாத இறுதியில் மீண்டும் முதல் ரகம் 85க்கும், இரண்டாம் ரகம் 75க்கும் விற்கப்பட்டது. இதே விலை கடந்த 10 நாட்களாக நீடிக்கிறது.

இதற்கிடையில் கடந்த 10 நாட்களாக கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், சின்ன வெங்காயம் நிலத்திலேயே முழு வளர்ச்சி பெறுவதற்கு முன்பே அழுகி வருகிறது. இதனால் அவற்றை விவசாயிகள் பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அவை இரண்டாம் மற்றும் மூன்றாம் தர  நிலையில் தரம் குறைவாக இருந்தாலும், விலை குறையாமல் அதே நிலையில் நீடிக்கிறது. வரும் நாட்களில் மழை குறைந்து, வெயில் அடித்தாலும், அறுவடை செய்ய வெங்காயம் இல்லாததால், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மட்டும் சின்னவெங்காயம் வரத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதால், விலை மேலும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

  • sothnai_jaya

    21 ஆண்டுகளுக்கு பிறக ஜெயலலிதா வீட்டில் ஐடி ரெய்டு : போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் கைது; சோதனைக்கு பிறகு விடுவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்