SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொழில் நுட்பத்தில் முறைகேடு செய்து போலி ஆதார் தயாரிக்க முயன்ற 10 பேர் கைது: உ.பி.யில் தனிப்படை அதிரடி

2017-09-13@ 20:52:54

லக்னோ: ஆதார் மையத்தின் தொழில் நுட்பத்தில் ஊடுருவி போலி ஆதார் அட்டைகள் தயாரிக்க முயன்ற 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆதார் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி சமூக விரோதிகள் சிலர் மோசடி செயல்களில் ஈடுபட முயற்சிப்பதாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி புகார் ஒன்றை பதிவு செய்தது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில் 10 பேர் ஆதார் இணையதளத்தில் ஊடுருவி அதன் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலி ஆதார் தயாரிக்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சில ஊடுருவல்களை அடுத்து மர்ம நபர்கள் இதை முறைகேடாக பயன்படுத்த முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஆதார் அளித்த புகாரின் பேரில் தற்போது அந்த முறைகேடு முறியடிக்கப்பட்டுள்ளது. ஆதார் வழங்கும் நிறுவனங்கள், பதிவு செய்யும் மையங்களை நடத்துவோர் முறைகேடுகளில் ஈடுபட முயன்றால் 5 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும்.

மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை பாயும். நாடு முழுவதும் ஆதார் விதிமுறைகளை மீறி செயல்பட முனைந்த 49 ஆயிரம் தனியார் நிறுவனங்கள் தடை செய்யப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2016 டிசம்பர் முதல் 6 ஆயிரத்திற்கும் அதிகமான விதிமுறைகள் சம்பவங்களில் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் 466 விதிமுறைகளை மீறிய மையங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.



ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DURGAPOOJA

    உன்னதமான பலவித கலைகளுடன் களை கட்டும் துர்கா பூஜை திருவிழா

  • RUSSIALIGHT

    ரஷ்யாவில் தொடங்கிய சர்கிள் ஆஃப் லைட் திருவிழா: வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்