SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் ஸ்டாலின் மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணை

2017-09-13@ 19:14:41

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரும் ஸ்டாலின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரிக்கவுள்ளது. ஸ்டாலின் மனு எண்ணிடப்படாததால் உடனே விசாரணைக்கு எடுக்கக்கோரி வக்கீல் முறையீடு செய்துள்ளார்.

முன்னதாக  நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மனுதாக்கல் செய்து இருந்தார். தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு  தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 233 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்க வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 113 பேரின் ஆதரவு மட்டுமே உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இதுவரை  ஆதரவளித்து வந்த டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆகஸ்ட் 22ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.திமுக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு 113 எம்எல்ஏக்களுடன் மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக பொறுப்பு ஆளுநரிடம் பல முறை மனு அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ள என்பது குறிப்பிடத்தது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்