SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெலங்கானாவில் உள்ள பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: முதல்வர் சந்திரசேகர ராவ் அதிரடி

2017-09-13@ 17:46:32

ஐதராபாத்: தெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டு, செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசிய அவர், தெலுங்கு மொழி விவகாரத்தில், பள்ளிகளுக்கு வேறு வழியில்லை. நமது தாய்மொழியான தெலுங்கை அவர்கள் கட்டாயப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறும் பள்ளிகளுக்கு, மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளிக்காது என்றார். அதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே மாதிரியான தெலுங்கு மொழி பாடப்புத்தகத்தைத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் தெலுங்கு சாகித்ய அகாடமிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தெலுங்கு மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும், அவற்றை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்