SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைனில் மொபைல் ஆர்டர், டெலிவரியில் சோப்: அதிர்ச்சியில் இளைஞர்

2017-09-13@ 17:35:28

புதுடெல்லி: ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது இது மாதிரியான சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. அதில் ஒன்று தான், டெல்லியில் ஒரு இளைஞர் ஆன்லைனில் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து, டெலிவரியில் சோப்பை பெற்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த சிராக் தவான் (22), அமேசான் வழியாக ஒன்பிளஸ் 5 என்ற ஸ்மார்ட்போனை கடந்த 7ம் தேதி ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அதன் டெலிவரி 11ம் தேதி வந்தது. டெலிவரி பாக்ஸை பிரித்து பார்த்தபோது உள்ளே 3 துணி துவைக்கும் சோப் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நான் அலுவலகத்தில் இருந்து இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்து டெலிவரி பாக்ஸை திறந்து பார்த்தபோது, ஸ்மார்ட்போனுக்கு பதிலாக உங்கள் விற்பனையாளர் 3 ஃபீனா டிட்டர்ஜன்ட் சோப்பை அனுப்பியுள்ளார் என்று தவான் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார். இந்த பதிவு வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனையடுத்து அமேசான் நிறுவனம் தவானுக்கு உரிய ஸ்மார்ட்போனை அனுப்பியது. மூத்த நிர்வாகத்திடம் முறையீடு செய்தததையடுத்து விரைவாக நடவடிக்கை எடுத்து ஸ்மார்ட்போனை அனுப்பியுள்ளனர் என்று தவான் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்