SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐக்கிய ஜனதா தள கட்சி சின்னம் சரத்யாதவ் அணிக்கு ஒதுக்க மறுப்பு: தேர்தல் ஆணையம் முடிவு

2017-09-13@ 17:21:07

புதுடெல்லி: பீகாரில் நிதிஷ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத்யாதவ் தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் காங்கிரசுடன் வைத்திருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பா.ஜனதாவுடன் முதல்வர் நிதிஷ் குமார் கைகோர்த்தார். இதை தொடர்ந்து அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் பிளவு ஏற்பட்டது. மூத்த தலைவர் சரத் யாதவ் தலைமையில் தனி அணி உருவானது.

தாங்கள்தான் உண்மையான ஐக்கிய ஜனதாதளம் என்றும், கட்சியின் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும்  கடந்த மாதம் 25-ந் தேதி, சரத் யாதவ் தரப்பில் தேர்தல் கமிஷனிடம் மனு கொடுக்கப்பட்டது. சில ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.ஆனால், நிதிஷ் குமார் தரப்பில், கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் கையெழுத்துகளுடன் கடந்த 8-ந் தேதி பிரமாண மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சரத் யாதவின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நேற்று நிராகரித்தது. போதுமான ஆவணங்கள் இல்லாததால், அவரது அணிக்கு சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும், வேண்டுமானால், கூடுதல் ஆவணங்களுடன் புதிதாக மனு அளிக்கலாம் என்றும் கூறியது. இத்தகவலை சரத் யாதவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு, சரத் யாதவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்