SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்.எல்.ஏ.க்களை போலீசார் மிரட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம் : டிடிவி தினகரன் பேட்டி

2017-09-13@ 16:30:40

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்குமாறு தமிழக காவல்துறையை அனுப்பி குடகு விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை மிரட்டுகின்றனர் என சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். சொந்தவிருபத்தின் பேரிலேயே எம்.எல்.ஏ.க்கள் குடகு விடுதியில் உள்ளனர். பொய் வழக்கு போடுவோம் என்று கூறி எம்.எல்.ஏ.க்களை மிரட்டி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களை போலீசார் மிரட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்று தினகரன் கூறியுள்ளார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக தரம்கெட்ட காரியத்தில் ஈடுபடுகின்றனர்.

பெருபான்மையை தக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்று தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். பழனியப்பன் கைது செய்யப்படுவதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. தனக்கு சம்மன் அனுப்பியது தொடர்பாக எம்.எல்.ஏ. பழனியப்பன் நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லூநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும் 21 எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்றும் கூறியுள்ளார். கட்சியை காப்பாற்ற தேவையான நடவடிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடுக்கப்படும் எனவும் கூறினார். உண்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களே நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர் என தினகரன் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்