SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய்லாந்து சுற்றுலா செல்ல திருச்சி நேரடி விமான சேவை வழங்கும் ஏர் ஏசியா

2017-09-13@ 12:23:54

வாரஇறுதி விடுமுறைக்கு சிக்கனமாக ஒரு உலகச் சுற்றுலா என்றால், அது கனவில்லை; நிழலடர்ந்த காடுகளில் கொண்டாடி மகிழும் உங்களது கனவுகள் அனைத்தும் ஏர் ஏசியாவால் நனவாகட்டும்.

alignment=


மேலும் ஏர் ஏசியா நிறுவனம் திருச்சியில் இருந்து நேரடியாக பாங்காக் செல்ல விமானங்களை இயக்குகிறது.

alignment=


ஷாப்பிங்: வாரஇறுதி விடுமுறை நாட்களில் பெரும்பாலான இந்தியர்களுக்குப் பிடித்த பெரிய பொழுதுபோக்கு என்றால் அது ஷாப்பிங். கால் கடுக்க நடந்தும், கூட்ட நெரிசலில் சிக்கி குதூகலித்தும் ஷாப்பிங் செய்வதில் விற்பன்னர்களாக ஆனவர்களுக்காகவே தாய்லாந்தின் பாங்காக், புகெட் இரு இடங்கள் இருக்கின்றன.

alignment=

இரண்டுமே ஷாப்பிங் மால்கள் மற்றும் மார்க்கெட்டுகளுக்குப் பெயர் போனவை. ஆடைகள் முதல் வீட்டு அலங்காரப் பொருட்கள் வரை ஷாப்பிங் செய்வதற்கு உகந்த அனைத்து விதமான அழகான வஸ்துகளுமே இங்கே கிடைக்கும். எனவே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் பிடித்த உங்களது வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் நீங்கள் இங்கே ஷாப் செய்யலாம்.

கடற்கரை: நீண்ட மணல்பரப்புடன் கூடிய பெரிய கடற்கரைப் பகுதி, அசரடிக்கும் அந்திப் பொழுதுகள், முகத்தில் மோதிக்கடக்கும் மேகப் பொதிகள் என இது தாய்லாந்தின் பெருமை சொல்லும் இன்னொரு விதமான சொர்க்கம்.
சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தை நேசிக்க மிகப்பெரிய காரணங்களில் ஒன்று இந்தக் கடற்கரையும்தான் என்றால் அது மிகையில்லை. கொய் சமுய், கொய் சங், கொய் ஃபிஃபி இவையெல்லாம் தாய்லாந்து கடற்கரையை
ஒட்டியே இருக்கும் குட்டி தீவுகள் ஆகும்.

தாய்லாந்து பல்லாண்டுகளாக அதன் அழகு ததும்பும் கடற்கரைகளுக்காகவும், கலைநயம் மிக்க கோயில்களுக்காகவும், பிரம்மாண்டமான அரண்மனைகளுக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்றது. அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை
ஈர்க்கும் விதமாக எப்போதுமே பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காத நவீனத்தையும் மறுக்காத அருமையான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது தாய்லாந்து. தாய்லாந்துக்கு என எத்தனையோ சிறப்புகள் உண்டு.

உணவு: உலக அரங்கில் தாய்லாந்து உணவுகளுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து உணவு விடுதிகளில் கிடைக்கும் பெனாங் அசாம் லஸ்கா, சார் சூய், சம்பல் ஸ்டிங்ரே உள்ளிட்ட உணவு வகைகளின்
சுவையை விவரிக்கவே வாழ்நாள் போதாது. இவை மட்டுமல்ல தாய் உணவு வகைகளின் பட்டியல் மேலும் மேலும் என நீண்டுகொண்டேதான் செல்லும். உலகில் வேறு எங்குமே நீங்கள் இத்தனை அருமையான உணவு
வகைகளை உண்டிருக்கவே முடியாது. அத்தனை சுவை, அத்தனை வெரைட்டி, அத்தனை அருமையான தயாரிப்புகள்.

alignment=

குட்டித் தீவுகள். இந்தத் தீவுகளும், ஸ்படிகம் போன்ற நீல நிற கடல் வெளியும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து அவர்களை மீண்டும் ஒருமுறை, மீண்டும் ஒருமுறை என தாய்லாந்துக்கான விடுமுறைப்பயணங்களைத் திட்டமிடத் தூண்டிக்கொண்டே இருக்கும். மேலும் கோவில்கள், இரவு வான வேடிக்கைகள், மசாஜ் செண்டர்கள் உட்பட பல இடங்களை சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுப்பதாக உள்ளது.

alignment=


மேலும் தாய்லாந்தின் சன்சேஷனல் சம்மர் சேல், தெய்வீக சுவையை உணரும் அனுபவத்தைத் தரக்கூடிய தெருவோர உணவகங்கள், சாகஷ உணர்வளிக்கும் வீர விளையாட்டுகள் என உங்களை மகிழ்விக்க ஏகத்துக்கும் காரணங்கள் கொட்டிக் கிடக்கும் தாய்லாந்துக்கு ஏர் ஏசியாவுடன் சென்று விடுமுறையை அனுபவியுங்கள்.

பேஸ்புக் வீடியோ: https://www.facebook.com/AirAsiaIndia/videos/1474342435941666

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kabul_terror_43

  காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

 • Christiansmanila

  மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

 • 22-01-2018

  22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்