SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

2017-09-13@ 10:52:02

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சேலம், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். சென்னையில் அரசு மருத்துவமனை உதவி மருத்துவர்கள் 10 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் முழுவது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்த்தாவது: காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலை கண்டறிய அரசு மருத்துவமனைகளில் ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது காய்ச்சலின் தாக்கம் சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் பரவி வரும் காய்ச்சலை கண்டுபிடிக்க வல்லுநர்கள் செயல்பட்டு வருகின்றன. மருத்துவர் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1013 புதிய உதவி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • HarrY_MeghanMarkel

    கோலாகலமாக நடைபெற்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரி-நடிகை மேகன் திருமணப் புகைப்படங்கள்..

  • Yelagirisummerceremony

    ஏலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு: ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

  • kodai_flower

    கொடைக்கானலில் 57வது மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

  • subwaymodi

    சோஜிலா சுரங்கப்பாதை திட்டப்பணி தொடக்கம் : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

  • 20-05-2018

    20-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்