SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் பலவிதம்

2017-09-13@ 09:52:01

வருவாய் பெருக்கும் பாரம்பரியம்:

கிரீஸ் நாட்டின் பழங்கால அக்ரோபோலிஸ் மலையில் 5ம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க கோயிலான பார்த்தினன் கட்டிடம் உலகப்புகழ் பெற்றது. இக்கட்டிடத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் மூலம் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு கிரீஸ் நாட்டின் சுற்றுலா வருவாய் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பார்த்தினன் கட்டிடத்திற்கு முன்பாக செல்பி எடுத்துக் கொள்கிறார் பெண் ஒருவர்.

பள்ளியில் அடியெடுத்து வைத்த குட்டி இளவரசர்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், கேத் தம்பதியின் மூத்த மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் பள்ளியில் அடியெடுத்து வைத்துள்ளார். 4 வயது நிரம்பிய ஜார்ஜ், லண்டனின் பேட்டர்சீ பகுதியில் உள்ள தாமஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது, நம்மூர் ப்ளே ஸ்கூல் போன்றது. கடந்த வியாழக்கிழமை முதல் முறையாக பள்ளிக்கு சென்ற குட்டி இளவரசரை, அவரது தந்தை வில்லியம்ஸ் அழைத்து சென்று விட்டுள்ளார். அரச குடும்பத்தில் ராஜ மரியாதையுடன் இருந்தாலும், குட்டி இளவரசர் ஜார்ஜ் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் போதே சற்று பதற்றத்துடனே காணப்பட்டார்.

வித்திடப்படும் அடுத்த தலைமுறை:

தென் கொரியாவும், வடகொரியாவும் எலியும், பூனையுமாக இருந்து வருகின்றன. இரு நாடுகளும் கடும் விரோதப் போக்குடன் இருந்தாலும், பகையை மறந்து ஒரே கொரியாவாக மாற வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். இதை வலியுறுத்தி, தென் கொரியாவின் எல்லையில் இம்ஜினாப் பெவிலியன் பகுதியில் அந்நாட்டு கொடிகள் மற்றும் தோரணங்களை கட்டி வைத்துள்ளனர். அடுத்த தலைமுறையாவது பகை எண்ணத்துடன் இருக்கக் கூடாது என்பதற்காக, அந்த இடத்தில் எல்கேஜி முடித்த மாணவர்களை அழைத்து வந்து, ஆசிரியைகள் குரூப் போட்டோ எடுக்கின்றனர்.

சீனர்களின் பேய் திருவிழா:

சீனர்களின் லூனர் காலண்டரின் 7வது மாதம் பேய் மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில், நகரத்தின் வாசல் திறந்து பேய்கள் உலகிற்குள் உலா வருமாம். அவ்வாறு வரும் பேய்கள் தங்களின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதர்களின் உடம்பில் புகுந்துவிடுவார்களாம். அதிலிருந்து தப்பிக்கத்தான் சீனர்கள் ‘பசி கொண்ட பேய் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். சீனா மட்டுமின்றி உலகில் சீனர்கள் வசிக்கும் அநேக நாடுகளில் திருவிழா களை கட்டுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சீனர்கள் சிலர் ‘பேய்களின் காக்கும் கடவுள்’ காகித உருவத்தை எரிக்கின்றனர். டிவி, பிரிட்ஜ், கார் போன்றவற்றை காகிதத்தில் செய்து, அதை பக்தியுடன் வழிபட்டு எரிப்பார்கள். இதன் மூலம் பேய்கள் மீண்டும் நரகத்திற்கு திரும்பும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த மாதத்தில் சீனர்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். கீழே கோடி ரூபாய் கிடந்தாலும் எடுக்க மாட்டார்கள். காரணம் பேய் வேலையாக இருக்கலாம் என்ற பயம் தானாம்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RAHULGANDHI

  குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

 • madurainavarathiri

  நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

 • DELHIProtest

  பனாரஸ் பல்கலைக்கழக மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

 • 26-09-2017

  26-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • aerospike_rocket

  செயற்கைக்கோள் ஏவுதல்களில் புரட்சியை உண்டாக்க இருக்கும் ஏரோஸ்பைக் ராக்கெட் - சோதனை ஓட்டத்திற்கு தயார்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்