SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டி வரியின் 2 பிரிவில் மாற்றம் செய்ய பரிசீலனை

2017-09-13@ 00:43:50

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. தற்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் 5, 12, 18, 28 என்னும் நான்கு விகிதங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 0 சதவீதம் என்னும் வரி விகிதத்தின் கீழ், உணவுப் பொருட்கள், கல்வி, மற்றும் மருத்துவ சேவைகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு கூட்டத்தில் 12 மற்றும் 18 சதவீத வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த இரண்டு வரி விகிதங்களால் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோகப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு மாநிலங்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மற்றும் 18 சதவீத வரிவிதிப்பை மாற்றி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த இரண்டு வரி விகிதங்களுக்கு பதில் ஒரே வரிவிதிப்பாக 18 சதவீதம் வசூலிக்கலாமா அல்லது இரண்டுக்கும் இடையில் 15 சதவீதமாக வசூலிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குள் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று மாதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொறுத்து அடுத்தக் கூட்டத்தில் அதிகபட்சமாக உள்ள 28 சதவீத வரிவிகிதம் குறித்தும் தீர்மானிக்கப்படும்.

கார்களுக்கு கூடுதல்வரி அரசாணை வெளியீடு
கார்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக செப்டம்பர் 9ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நடுத்தர ரக கார்களுக்கு தற்போது 45 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கார்களுக்கு இனி 48 சதவீதமாக வசூலிக்கப்படும். ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் 4ஆயிரம் மிமி நீளம் உள்ள எஸ்யுவி கார்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். அதே சமயம் ₹3 லட்சம் வரையிலான கார்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

  • turkey_dust_storm

    துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • republic_vilaaa

    குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

  • 20-01-2018

    20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்