SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாரிய தலைவர் லெவன் ஏமாற்றம் 103 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

2017-09-13@ 00:43:40

சென்னை: வாரிய தலைவர் லெவன் அணியுடனான பயிற்சி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலியா 103 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. அந்த அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்தது. வார்னர் 64 ரன் (48 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் ஸ்மித் 55 ரன் (68 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட் 65 ரன் (63 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டாய்னிஸ் 76 ரன் (60 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), வேட் 45 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களமிறங்கிய வாரிய தலைவர் லெவன் அணி 48.2 ஓவரில் 244 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கோஸ்வாமி 43, அகர்வால் 42, ராணா 19, கேப்டன் குர்கீரத் 27, கர்னிவா 40 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), குஷாங் பட்டேல் 41* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஏகார் 4, ரிச்சர்ட்சன் 2, பாக்னர், ஸம்பா, ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி 103 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, இதே மைதானத்தில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

  • DELHIProtest

    பனாரஸ் பல்கலைக்கழக மாணவிகள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டம்

  • 26-09-2017

    26-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • aerospike_rocket

    செயற்கைக்கோள் ஏவுதல்களில் புரட்சியை உண்டாக்க இருக்கும் ஏரோஸ்பைக் ராக்கெட் - சோதனை ஓட்டத்திற்கு தயார்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்