SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டச்சத்து உணவு!

2017-09-12@ 10:10:43

நன்றி குங்குமம் முத்தாரம்

உடல் மொழி ரகசியங்கள் 45

உடல் மூப்படைவதால் ஃபிரிரேடிகல்கள் பெருமளவில் உருவாகி சிதைவுகள் பெருகி விடுகின்றன. இத்தகைய சிதைவுகளைக் குறைக்க 2 வழிமுறைகள் உள்ளன. அவை: தினசரி நாம் உண்ணும் உணவு ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். உடலில் பெருமளவில் சேரும் ஊட்டச்சத்துகளால்  உடலின் மரபியல் மற்றும் செல் ஆகியவற்றின் சிதைவுகளை தடுக்கும் ஆற்றல் மெல்ல பெருகும்.

உடல் செல்களில் வைட்டமின் பி சத்துகள் மற்றும் ஃபிரிேரடிகல்களை செயலிழக்கச் செய்யும் ஆன்டியாக்சிடண்ட் ஊட்டச்சத்துகள் பெருகுவதனால் டிஎன்ஏ சிதைவுகள் குறைந்து அதன் செயல்பாடுகள் மேம்படும்.எந்த வயதிலும் ஊட்டச் சத்துகள் பயன்தரும்.

அண்மைய ஆராய்ச்சிகளில் மீன், காய்கறி, கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உண் பதால் உடல்தோலின் சுருக்கம் குறைவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பலவகை ஊட்டச்சத்துகளை துணை உணவாக சாப்பிடுவதால் உடல் செல்களில் ஊட்டச்சத்துகள் பெருகி டிஎன்ஏ, மரபணு, குரோமோசோம் ஆகியவை ஃபிரிரேடிகல்களால் சிதைவது குறைகிறது.

பெருமளவில் ஊட்டச்சத்துகள் உடலில் சேர்க்கப்படுவதால், மரபணுக்கள் சார்ந்த உயிர்வேதியங்களை உடலில் நிறைவு செய்வதாகும். ரத்தம் மற்றும் உடல் திசுக்கள் ஊட்டச்சத்துகள் செறிந்து உடல்நலம் மேம்படுகிறது. மரபியலில் உண்டாகும் மாற்றம் உடலின் நோய் ஏற்புத்தன்மையை அதிகரிக்கிறது. எ.கா: ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை மரபியல் மாற்றங்களை குறைக்கின்றன. இந்த மரபியல் ‘பாலிமார்பிசம்’ உடலின் ஊட்டச்சத்து ஏற்புத்திறனைக் குறைக்கக்கூடியது.

மரபணுக்களுக்கு உரிய உயிர்வேதியல் ஊட்டச்சத்துகள் நிறைவடையும் அளவுக்குப் பெருகுவதால், செயல்திறன் குன்றிய மரபணுக்களின் செயல்திறன் அதிகரித்து நோய்கள் உருவாகும் வாய்ப்பு குறைகிறது.

அணுக்கதிர் வீச்சால் டிஎன்ஏ சிதைவதுபோல் உடலில் உயிர்ச்சத்துகள் மற்றும் கனிமச் சத்துகள்  பற்றாக் குறையால் அதே விளைவுகள் உண்டாவதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழக செல் உயிரியல் ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் புருஸ் ஆம்ஸ் பெர்க்லே நடத்தியுள்ள ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளது வைட்டமின் சிகிச்சை மீதான நம்பிக்கையைக் கூட்டுகிறது.

(நிறைவு)

ச.சிவ வல்லாளன்

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2017

    24-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • durgapujaidols100feet

    துர்கா பூஜை: வடமாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் துர்கா சிலைகள் வடிவமைப்பு

  • MUMBAItrAin

    100 வாரத்தில் 7.5 மில்லியன் கழிவுகள் அகற்றம்: பொதுமக்களால் பளிச்சென மாறிய மும்பை வெர்சோவா கடற்கரை

  • modi_inaguratee

    வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி 17 புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்

  • 23-09-2017

    23-09-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்