SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவில் தயாராகும் மாருதி சுசுகி புதிய கார்

2017-09-10@ 00:27:29

இந்தியாவில் மாருதி சுசுகி கார்கள் விற்பனையில் கோலோச்சி வருகிறது. தற்போதைய காலத்தில் மாருதியின் தயாரிப்புகளில் பெரிய விற்பனை திறனை பெற்று தந்த மாடல் விட்டாரா பிரிஸ்ஸா. இந்நிலையில், இந்தியாவின் ரோஹ்டாக்கில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை மாருதி சுசுகி நிறுவுகிறது. இது, 2018ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரலாம். இந்த மையம் இந்தியாவில் மாருதி சுசுகியின் தயாரிப்புகளுக்கான சந்தையை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அடுத்த தலைமுறைக்கான ஆல்டோ மற்றும் வேகன்-ஆர் கார்களை தயாரிக்கும் முனைப்பிலும் மாருதி இறங்கியுள்ளது.

ஜப்பானில், சுசுகி-யின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து ஆல்டோ மற்றும் வேகன்-ஆர் காருக்கான தேவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்பார்ப்புகளை பெரிய அளவில் உருவாக்கியுள்ள சுசுகி-யின் ஸ்விஃப்ட் கார், ரெனால்ட் க்விட் காருக்கு போட்டியாக சந்தையில் களமிறங்க உள்ளது. அடுத்த தலைமுறைக்கான ஹேட்ச்பேக் காருக்கான தளத்தை ஆராய்ந்து, மாருதி சுசுகி தனது தயாரிப்புகளை களமிறக்க உள்ளது. புதிய தயாரிப்புகள் 2022ல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்