SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரணியில் மயக்க ஊசி போட்டு கொடுமை சென்னை சிறுமி பலாத்காரம் அரசு டாக்டர், உதவியாளர் கைது

2017-09-10@ 00:13:38

சென்னை:  சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ராணி (45). வங்கியில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள். ராணியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில், ராணியின் 15 வயது மகள் கடந்த மாதம்  திடீரென மாயமானார். இதுகுறித்து  ராணி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், இவரது குடும்பத்துக்கு தெரிந்த நபர் ஒருவர் சிறுமியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வந்து ராணியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதுகுறித்து மகளிடம் தாய் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. உறவினரான திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த சித்ரா என்பவர் சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். அதன்படி, மற்றொரு உறவினரும் ஆரணி அரசு மருத்துவமனை டிரைவருமான சுரேஷ் என்பவர் சிறுமியை ஆரணிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு, சித்ராவின் வீட்டில் சிறுமியை தங்கவைத்து ஆரணியில் உள்ள துணிக்கடையில் அவருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் சித்ரா வீட்டுக்கு வந்த சுரேஷ், சிறுமியை பலாத்காரம் ெசய்துள்ளார். மேலும் அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று சுரேஷ் தனது நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்துள்ளார். அதேபோல், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் ஜெயபிரகாசம் என்பவரும், சிறுமிக்கு மயக்க ஊசி போட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் இந்த சம்பவத்துக்கு மருத்துவ உதவியாளர் பாண்டியன் உதவியாக இருந்ததாகவும் சிறுமி கூறினார். இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த ராணி, கடந்த 7ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா மற்றும் போலீசார் ஆரணி அரசு மருத்துவனைக்கு சென்று, டாக்டர் ஜெயபிரகாசம், மருத்துவ உதவியாளர் பாண்டியன் ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர். மேலும் தலைமறைவாக உள்ள டிரைவர் சுரேஷ், சித்ரா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், மாவட்ட மருத்துவ சுகாதார பணிகள் இணை இயக்குநர் நவநீதம் நேற்று ஆரணி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவர்கள் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  சிறுமியை மயக்க ஊசி போட்டு டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்