SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிலிப்பைன்சில் 210 கி.மீ வேகத்தில் பயங்கர சூறாவளி 238 பேர் பரிதாப சாவ

2012-12-06@ 02:15:45

நியூ பேட்டன் : பிலிப்பைன்ஸ் நாட்டில் 210 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியது. பல்வேறு சம்பவங்களில் 238 பேர் இறந்தனர்.  பிலிப்பைன்ஸை ''போப்பா'' என்ற சூறாவளி நேற்று முன் தினம் தாக்கியது. தெற்கு சீன கடலை நோக்கி வீசிய இந்த சூறாவளியால் நியூ பேட்டன் பகுதியில் உள்ள மலைகள் நிறைந்த மின்டனா தீவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்தன. வீடுகள் இடிந்தன.

 மின்சாரம், தொலை தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நிலச்சரிவு, கட்டிடம் இடிந்தது போன்ற பல சம்பவங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.  மின்டனா பகுதியில் மட்டும் 142 பேர் இறந்தனர், 241 பேரை காணவில்லை. அருகில் உள்ள டேவோ ஓரியண்டல் மாகாணத்தில் 81 பேர் இறந்தனர். பிரின்சா பகுதியில் 15 பேர் இறந்தனர். 87 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டீல் நகரில் ஒரு சில வீடுகள் மட்டுமே சேதமடையாமல் உள்ளன. வீடுகளை இழந்த மக்கள் திறந்த வெளியிலும், வீட்டின் கூரைகள் மீதும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மருந்துகள், துணிகள், கூடாரங்கள் ஆகியவற்றை வழங்க விரைந்து செயல்பட வேண்டியுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

prescription coupon card go viagra online coupon
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

  • WillaHurricaneMexico

    மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்