SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பகுஜன், சமாஜ்வாடி அமளி மாநிலங்களவை ஒத்திவைப்ப

2012-12-06@ 00:23:48

புதுடெல்லி: மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் செய்த அமளியால் மாநிலங்களவை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், அவருடைய கட்சி எம்.பி.க்களும் எழுந்து, மும்பையில் உள்ள இந்து மில்லில் அம்பேத்கருக்கு நினைவிடம் கட்டும்படி வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அரசு இன்று அறிக்கை வாசிக்க இருப்பதாக அவையின் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்தார். அதை ஏற்காத மாயாவதி, கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு அரசின் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர்களை அமைதிப்படுத்த அன்சாரி எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததால், பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.பின்னர் அவை கூடியபோது, நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் ராஜீவ் சுக்லா, அரசின் அறிக்கையை வாசித்தார். அதில், ‘இந்து மில் நிலத்தை நினைவிட பயன்பாட்டுக்காக மகாராஷ்டிரா அரசுக்கு ஒதுக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது’ என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நினைவிடம் கட்டுவதற்கான திட்டம், அதற்கான தொகை எவ்வளவு, நினைவிடத்தை கட்டுவதற்கான காலகெடுவை தெரிவிக்கும்படி மாயாவதி கேட்டார். அதற்கு, ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா விளக்கம் அளிப்பார் என்று பதில் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் அமைதியாகினர்.இதைத் தொடர்ந்து, அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து சமாஜ்வாடி உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கோபமடைந்தார். ‘‘அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் அவையை நடத்த விடக்கூடாது என்ற பாணியில் செயல்படுகின்றன. அவையை நடத்த அரசு விரும்புகிறதா? இல்லையா? என்பதை பிரதமர் வந்து தெரிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இருப்பினும், அமளி தொடர்ந்ததால், அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவையின் துணைத் தலைவர் குரியன் அறிவித்தார்.

abilify and coke abilify maintena abilify and coke

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • indhiya_raanuvam111

  சீன ராணுவத்தினரை எதிர்கொள்ள இந்திய - சீன எல்லையில் 8000 படைகளை குவித்துள்ள இந்திய ராணுவம்

 • anbalagan_11

  சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 • padmavathi_bram_fn

  பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் நான்கு மாட வீதியில் பவனி வந்த காட்சிகள்

 • mayilapore_vaguppu11

  மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு காவல்நிலைய பணிகள் மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வகுப்பு

 • AshokKumarsuicide

  சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை: பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்