SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர் தர தொடர்ந்து மறுப்பு உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா பிடிவாதம

2012-12-05@ 01:44:17

சென்னை : சம்பா பயிரைக் காப்பாற்ற தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதமாக கூறி வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய் தது. இந்நிலையில், இரு மாநில முதல்வர்களும் பேசி சுமூகத் தீர்வை எட்ட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நடந்த பேச்சுவார்த்தையாலும் பயனில்லாமல் போனது.

இரு மாநில அரசுகளும் தங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் தண்ணீர் இருப்பு ஆகியவை குறித்த புள்ளிவிவரங்களையும், ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயின், மதன் லோக்கூர் ஆகியோர் முன்னிலையில் திங்கள் கிழமை விசாரணை நடந் தது. கர்நாடகா அரசு 30 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

ஆனால், அதற்கு கர்நாடக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநாதன் கூறியதா வது: காவிரி டெல்டா பகுதியில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சம்பா பயிர் முழுவதும் கருகிவிடும். தமிழகத்துக்கு தரவேண்டிய 37 டிஎம்சி தண்ணீரில் 30 டிஎம்சி தண்ணீரைத்தான் கேட்கிறோம்.  

கர்நாடகாவில் தற்போது அறுவடை நேரம் என்பதால் அங்கு தண்ணீர் தேவையில்லை. அடுத்த சாகுபடிக்காக தண்ணீரை கர்நாடக அரசு சேமித்து வைக்கிறது. எனவே, தமிழகத்தில் சம்பா சாகுபடியை காப்பாற்றுவதற்காக 30 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். கர்நாடக அரசு சார்பில் வக்கீல் அனில்திவான் கூறியதாவது: காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். இப்போது, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் எங்கள் பயன்பாட்டுக்கே போதுமானதாக இல்லை.

தமிழகத்துக்கு தண்ணீர் தந்ததால் கர்நாடகத்தில் 5000 முதல் 10,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் திறந்துவிட முடியாது. தமிழக அரசின் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பிலும் ஒத்த கருத்து ஏற்படாததால் விசாரணை புதன் கிழமையும் தொடரும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். புதன்கிழமை மதியம் 2 மணிக்கு மீண்டும் வாதம் தொடரவுள்ளது.

watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
drug coupon card prescription coupons drug discount coupons
sinemet megaedd.com sinemet
abilify and coke abilify maintena abilify and coke
cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

 • 17-10-2019

  17-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்