SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒலிம்பிக் சாம்பியனிடம் போராடி தோற்றது இந்தியா

2012-12-05@ 01:40:57

மெல்போர்ன் : சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனியிடம் போராடித் தோற்றாலும், இந்தியா ''ஏ'' பிரிவில் முதலிடத்தை தக்கவைத்தது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வரும் இந்த தொடரில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தையும், 2வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி அசத்தியது. கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் நேற்று மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 2,3 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது. இந்தியா சார்பில் குர்விந்தர் சிங் சாண்டி (6வது நிமிடம்), நிதின் திம்மையா (46வது நிமிடம்) கோல் போட்டனர். ஜெர்மனி வீரர்கள் ஆலிவர் கார்ன் (14), தோபியாஸ் மதானியா (56 மற்றும் 57வது நிமிடம்) கோல் அடித்தனர்.
இப்போட்டியில், இந்தியா 2 முறை முன்னிலை பெற்றும் வெற்றி வாய்ப்பை வீணடித்தது.

 ஏ பிரிவில் இந்தியா, ஜெர்மனி தலா 6 புள்ளியுடன் சமநிலை வகித்தாலும், அதிக கோல் அடிப்படையில் இந்தியா முதலிடம் பிடித்தது. ஜெர்மனி, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அடுத்த இடங்களைப் பிடித்தன. இன்று ஓய்வு நாள். நாளை கால் இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. பி பிரிவில் 4வது இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா கால் இறுதியில் மோதும்.

i want to cheat on my husband link my husband cheated on me blog


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்