SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநர் மாளிகையில் விழா துணை முதல்வராக ஓ.பி.எஸ் பதவியேற்பு : மா.பா.பாண்டியராஜன்

2017-08-22@ 01:10:43

சென்னை : துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சராக மா.பா.பாண்டியராஜனும் நேற்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் அதிமுக இரண்டாவது முறையாக கடந்த 2016ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். இதை தொடர்ந்து. அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். அவரது தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர். இந்தநிலையில், பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து வெளியேறி புது அணியை உருவாக்கினார். இதையடுத்து, தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையில் 30 அமைச்சர்கள் பிப்ரவரி 16ம் தேதி புதிதாக பொறுப்பேற்று கொண்டனர்.

இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மா.பா பாண்டியராஜன் பள்ளி கல்வி துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் வகித்த வந்த பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செங்கோட்டையனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைச்சராக அவர் பொறுப்பேற்று கொண்டார். இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், நிதித்துறை, வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இட வசதி கட்டுப்பாடு, நகரமைப்பு திட்டமிடல், நகர் புற வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஆகிய இலாக்காக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மா.பா.பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 2 அமைச்சர்கள் இலாகா மாற்றம்:  ஜெயக்குமார் வகித்து வந்த நிதித்துறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் இனி மீன்வளத்துறையை மட்டும் கவனிப்பார். உடுமலை ராதாகிருஷ்ணன் அவர் வகித்து வந்த வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று  வாரியம் மற்றும் இட வசதி கட்டுப்பாடு, நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புற  வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

கால்நடை துறை கவனித்து வந்து பாலகிருஷ்ணா ரெட்டியின் இலாகா பறிக்கப்பட்டு அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துறையை ஏற்கனவே, அமைச்சர் செங்கோட்டையன் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமைச்சர் செங்கோட்டையன் கவனித்து வந்த தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மா.பா.பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையை மட்டும் கவனிப்பார். தொழில் துறை அமைச்சர் எம்சி சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமங்கள் துறைகள் பறிக்கப்பட்டு, அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புதிதாக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம், மா.பா.பாண்டியராஜன் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் நேற்று மாலை நடந்தது. கவர்னர்  (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பன்னீர் செல்வம், மா.பா.பாண்டியராஜன் ஆகியோருக்கு பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். தொடர்ந்து, கவர்னருடன் அமைச்சர்கள் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம், மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் தலைமை செயலகம் சென்று பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

எடப்பாடி-ஓபிஎஸ்யை இணைத்த கவர்னர்


பதவியேற்பு விழா முடிந்தவுடன் கவர்னர்(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அருகில் நின்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் கைகளை இணைத்து வைத்தார். இதை தொடர்ந்து, இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

விரைவில் பொதுகுழு கூடும்: அமைச்சர்கள்

துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறுகையில், “ நீட் உள்ளிட்ட தமிழக பிரச்னையில் கவனம் செலுத்துவேன். 7 மாதங்களாக ஒத்துழைப்பு வழங்கிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி என்றார். அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “பொதுக்குழுவிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை தலைமை கழகம் மேற்கொள்ளும் என்றார்.

வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில், “சட்டப்பூர்வமான பொதுக்குழு விரைவில் கூட்டப்படும்” என்றார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனிசாமி கூறும்ேபாது, “தினகரன் குறித்து கேள்வி எழுப்பிய போது” மகிழ்ச்சியான தருணத்தில் மற்ற விஷயங்கள் குறித்து பேச வேண்டாம்” என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்