SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவில் பிரிந்து செயல்பட்ட இரண்டு அணிகள் இணைந்ததால் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது

2017-08-22@ 01:10:41

சென்னை : அதிமுகவில் பிரிந்து செயல்பட்ட இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் கூறினார். அதிமுகவில் நேற்று மதியம் இணைப்பு விழா முடிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாபா.பாண்டியராஜன் ஆகியோர் கவர்னர் மாளிகை சென்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதித்துறை மற்றும் வீட்டு வசதித்துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா முடிந்ததும், கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து நேராக சென்னை, தலைமை செயலகம் வந்த ஓ.பன்னீர்செல்வம் முதல் மாடியில் ஏற்கனவே முதல்வராக செயல்பட்ட அறையில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் கட்சி வெற்றிபெற பிரசாரம் செய்தார். இதன் காரணமாக, ஆண்ட கட்சி தொடர்ந்து மீண்டும் ஆட்சி செய்யும் நிலை 32 ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டது. இந்த இயக்கத்திற்கு வலு சேர்த்த மாபெரும் தலைவர்கள் 45 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக வளர்த்து தந்திருக்கிறார்கள். இரு அணிகளுடைய இணைப்பு இன்று நடந்துள்ளது. அதிமுக இயக்கத்தை தாங்கி பிடித்துக் கொண்டுள்ள தொண்டர்களும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி தான் என்னுடைய உள்ளத்திலும் இருந்தது என்றார். தற்போது, அமைச்சர் செங்கோடையன் இருந்த அறை தான் ஓபிஎஸ்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனுக்கு முதல் மாடியில் காலியாக இருந்த வேறு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பாண்டியராஜனுக்கு 31வது இடம்


எடப்பாடி அமைச்சரவையில், ஓபிஎஸ் அணியில் இருந்த மாபா.பாண்டியராஜனுக்கும் இடம் கிடைத்தது. ஆனால், அவருக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அமைச்சரவையில் பாண்டியராஜன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போதைய, அமைச்சரவை வரிசையில் மொத்தமுள்ள 33 பேரில் மாபா.பாண்டியராஜனுக்கு 31வது இடமே வழங்கப்பட்டுள்ளது.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்