SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவில் 7 மாதமாக நீடித்து வந்த அதிகார போட்டி முடிவுக்கு வந்தது : பிரச்னைகள் கடந்து வந்த பாதை பரபரப்பு தகவல்கள்

2017-08-22@ 00:54:39

சென்னை : அதிமுகவில் 7 மாதமாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரு அணிகளாக கடந்த பிப்ரவரி மாதம் உடைந்தது. சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று இரண்டாக செயல்பட்டது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அது எடப்பாடி அணியாக மாறியது. அதன் பிறகு ஓபிஎஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைக்க எடப்பாடி முடிவு செய்தார். இதற்காக டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அணிகள் இணைய ஓபிஎஸ் விதித்த இரண்டு கோரிக்கைகளையும் எடப்பாடி தரப்பினர் நிறைவேற்றினர். இதனால், எந்த நேரத்திலும் இரு அணிகளும் இணையலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 7 மாதத்துக்கு பிறகு இரு அணிகளும் நேற்று இணைந்துள்ளன. கடந்த 7 மாதமாக நடந்த அதிரடி திருப்பம் வருமாறு:

டிச.5ம் தேதி: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.
டிசம்பர் 29: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி 5: கட்சியும், ஆட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.
பிப்ரவரி 5: ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
பிப்ரவரி 7: முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
பிப்ரவரி 7:  ஓபிஎஸ் ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென 40 நிமிட தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவர் “தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக” பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
பிப்ரவரி 14: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தது.
பிப்ரவரி 14: சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியானது.  இதனால், சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. அதிமுகவின் புதிய சட்டப்பேரவைத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிப்ரவரி 14: ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 15: ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
* ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
பிப்ரவரி 16: எடப்பாடி பழனிசாமி 31 அமைச்சர்களுடன் முதல்வராக பதவியேற்றார்.
பிப்ரவரி 18: சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அமளிக்கு மத்தியில் 122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.
ஏப்ரல் 12: ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
* இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன் வேட்பாளராக களத்தில் இறக்கப்பட்டனர்.
* அதிமுகவின் இரு அணிகளும் கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’ தங்களுக்குத்தான் என்று தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரின. இதையடுத்து மார்ச் 22ம் தேதி இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது.
* வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா காரணமாக ஏப்ரல் 9ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
ஏப்ரல் 18: ஓ.பன்னீர்செல்வம், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை தேவை என்று கூறினார். இரு கோரிக்கையை நிறைவேற்றினால் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தார்.
* அணிகள் இணைப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சி, ஆட்சியில் இருக்கக் கூடாது. சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி, ஆட்சியை காப்பாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
* அணிகளை இணைக்க எடப்பாடி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும், ஓபிஎஸ் அணி சார்பில் 7 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
ஏப்ரல் 25: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 11: திருவேற்காட்டில்  நடந்த பொதுக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழு கலைக்கப்படுகிறது என அறிவித்தார்.
ஆகஸ்ட் 4:  2 மாதம் அமைதி காத்த டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ’இரு அணிகளும் இணையும் என இரண்டு மாதங்கள் காத்திருந்தேன். ஆனால், இணையவில்லை. நாங்கள்தான் உண்மையான அதிமுக. கட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகிறேன் என அறிவித்தார். தமிழகம் முழுவதற்குமாக 60 புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதனால், அதிமுக மூன்று அணிகளாக பிளவுபட்டது.
ஆகஸ்ட் 10:  துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.  
ஆகஸ்ட் 17: ெஜ.மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். போயஸ்கார்டன் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.
ஆகஸ்ட் 18: போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி அணிகள் இணைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மேலும் முக்கிய பிரமுகர் ஒருவர் இல்லத்திலும் ஆலோசனை நடந்தது.
* இரு அணிகள் இணைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 18ம் தேதி ஓ.பி.எஸ். தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சுமார் 5 மணி ேநரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அணிகள் இணைப்பு தாமதம் ஆனது.
* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அணிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆகஸ்ட் 19: இணைப்புக்கு நான் தடையில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகள் இணைவது தொடர்பாக ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 ஆகஸ்ட் 21: 7 மாதத்திற்கு பிறகு எடப்பாடி, ஓ.பி.எஸ்.ஆகிய இரு அணிகளும் இணைந்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rahl_soniyaa

  டிசம்பர் 16ல் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் : ஒருமனதாக தேர்வாகிறார் ராகுல்காந்தி

 • mnao_diretor11

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா: வெற்றி பெற்றவர்களுக்கு டைரக்டர் மனோபாலா பரிசுகள் வழங்கினார்

 • WorldMissManishiChile

  உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் மனுஷி சில்லர்: 118 நாடுகள் பங்கேற்பு

 • Okenakal

  ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து உற்சாகம்

 • 20-11-2017

  20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்