SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரோல் கூட கொடுக்காத நாட்களில் சசிகலா சிறைக்கு வெளியே சென்றது எப்படி?: டிஐஜி ரூபா டெல்லியில் பேட்டி

2017-08-22@ 00:48:50

புதுடெல்லி : சிறைத்துறை மூலம் பரோல் கூட கொடுக்காத காலக்கட்டத்தில் சசிகலா மற்றும் இளவரசி இருவரும் சிறைக்கு வெளியே சென்று வந்தது எப்படி? அதற்கு உதவி செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிய சிசிடிவி காட்சிகளின் மூலம் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக டிஐஜி ரூபா டெல்லியில் நேற்று பேட்டியளித்தார். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில்(ஐடிபிபி) சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளை கவுரவிக்கும் விழா மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ ஆகியோர் தலைமையில் நேற்று தெற்கு டெல்லியில் இருக்கும் விக்யான் பவனில் நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு நடந்த இந்த விழாவில் நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறையின் முன்னாள் டிஐஜியான ரூபாவும் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் அளித்த பேட்டி: பெங்களூரு பரப்பன அகரஹாரா சிறையை பொருத்தவரையில் சசிகலாவுக்காக பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்த ஆதாரங்களை அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஒரு சிடியாக தயாரித்து, வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினரிடம் ஒப்படைத்துள்ளேன்.

மேலும், இதில் ஊழல் நடந்துள்ளதா என்ற கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ள கர்நாடக ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளிடமும் சசிகலா சம்பந்தப்பட்ட காட்சிகள் அடங்கிய சிடி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள காட்சிகளை நுணுக்கமாக கவனித்து பார்த்தால் அவர்கள் இருவரும் சிறையின் வெளிப்பகுதியில் இருந்து உள்ளே வருவது உங்களுக்கே தெளிவாக தெரியும். அவர்கள் இருவருக்கும் அந்த குறிப்பிட்ட நாட்களில் சிறைத்துறையால் பரோல் அனுமதி கூட வழங்கப்படவில்லை அப்படி இருக்கும்போது அவர்கள் வெளியே சென்றது எவ்வாறு? என்பது குறித்து அதிகாரிகளால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.  இதையடுத்து வீடியோ ஆதாரங்கள் போலியானவை என அதிமுகவினர் சிலர் கூறுகிறார்களே என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “யார் எதைப்பற்றி கூறினாலும் எனக்கு அதில் கவலையில்லை. நான் சிறையில் நடந்தது என்னவோ அதன் உண்மை காட்சிகளை படமாகவும், வீடியோவாகவும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டேன். அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் யூகிதமான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை’’ என ரூபா  தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

 • turkey_dust_storm

  துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • republic_vilaaa

  குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்