SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நேரடி பண பரிமாற்ற திட்டம் பட்ஜெட்டில் அறிவித்ததுதான

2012-12-04@ 01:30:42

புதுடெல்லி : நேரடி பண பரிமாற்ற திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியங்களில் முறை கேடுகளை தவிர்க்க, அரசின் மானிய தொகையை நேரடியாக ஏழைகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 51 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த 51 மாவட்டங்களில் 4 மாவட்டங்கள் குஜராத்தில் உள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் இது நடத்தை விதிமீறல் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜ. புகார் அளித்தது.

புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டது. அதன்படி, தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு நேற்று கடிதம் மூலம் விளக்கம் அளித்தது. அதில், ‘‘நேரடி பண பரிமாற்ற திட்டம் கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சரின் பட்ஜெட் உரையிலேயே அறிவிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் இத்திட்டம் பற்றி முதல் முதலாக செப்டம்பர் 28ம் தேதி பத்திரிகை குறிப்பு வெளியிட்டது. குஜராத் தேர்தல் தேதி அக்டோபர் 3ம் தேதிதான் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படவில்லை’’ என்று கூறியுள்ளது. இது குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

coupons for cialis printable read free discount prescription cards
prescription coupon card viagra online coupon viagra online coupon
drug coupon card prescription coupons drug discount coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்