SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா, இளவரசி வெளியில் சென்று வரும் வீடியோ காட்சி :டிஐஜி ரூபா ஊழல் தடுப்பு படையிடம் கொடுத்துள்ளார்

2017-08-22@ 00:47:27

பெங்களூரு : சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் இருந்து வெளியில் சென்று திரும்பும் வீடியோ காட்சி அடங்கிய சி.டி.யை ஊழல் தடுப்பு படையிடம் போலீஸ் டிஐஜி ரூபா வழங்கியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக முதல் அறிக்கை கொடுத்திருந்த டி.ஐ.ஜி.ரூபா, கடந்த மாதம் 15ம் தேதி தனது இரண்டாவது அறிக்கையை மாநில தலைமை செயலாளர், மாநில உள்துறை முதன்மை செயலாளர், மாநில காவல்து றை தலைவர் ரூப்குமார் தத்தா, மாநில சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், ‘சசிகலா அடைக்கப்பட்டுள்ள செல் பகுதியில் உள்ள 2வது சிசிடிவி கேமராவும் இயங்கவில்லை. சிறையில் உள்ள சசிகலாவை காண வருவோருக்கு சிறை கண்காணிப்பாளர் அறை அருகில் தனி இடம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அமர தனி இருக்கையும், பார்வையாளர்கள் அமர நான்கு நாற்காலிகள் மற்றும் ஒரு மேஜை போடப்பட்டுள்ளது  சசிகலாவுக்கு ஒருநாளும் சிறை உணவு வழங்கவில்லை. அவர் விரும்பிய உணவுகள் வழங்கப்பட்டது, செல்போனில் தொடர்பு கொண்டு பேச எந்த தடையும் விதிக்கவில்லை. மேலும் கடந்த 6 மாதங்களில் சசிகலாவை எந்தெந்த நாளில் யார் யாரெல்லாம்  சிறையில் சந்தித்து பேசினார்கள் என்பது தொடர்பான  விவரங்கள் கொண்ட ஆவணமில்லை.  

வருகை பதிவேடுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை விதிமுறைகளை மீறி வெளியில் ஷாப்பிங் சென்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கர்நாடக ஊழல் தடுப்பு படை (ACB) போலீசாரிடம் போலீஸ் டிஐஜி ரூபா கடந்த சனிக்கிழமை கொடுத்துள்ள சி.டி. ஒன்றில், பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் சாதாரண உடையில் சிறையில் இருந்து வெளியில் சென்று ஷாப்பிங் செய்த பொருட்களை பேக்கில் கொண்டுவரும் வீடியோ காட்சி பதிவாகியுள்ளது.  சிறையின் நுழைவு கதவை போலீஸ் ஒருவர் திறக்கிறார். கதவு திறந்ததும் போலீஸ் அதிகாரி ஒருவர் நடந்து செல்ல பின்னால் சசிகலா, இளவரசி ஆகியோர் வேகமாக நடந்து செல்லும் காட்சியும், அவர்கள் நடந்து செல்வதை கைதி ஒருவர் பார்க்கும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் அந்திசாயும் நேரத்தில் காணப்படும் தட்ப-வெப்ப நிலை போல் தெரிவதால் மாலை 6 முதல் 7 மணி வரையில் அவர்கள் வெளியில் சென்று வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரூபா ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் கொடுத்துள்ள சி.டியில் பதிவாகியுள்ள காட்சிகள் எலக்ட்ரானிக் மீடியாக்களில் வெளியாகியுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்றே சொன்னது தினகரன்

பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா மற்றும் இளவரசி, வெளியே ஷாப்பிங் சென்று வந்தது தொடர்பான செய்தி மற்றும் அதற்குரிய புகைப்படங்கள் தினகரன் நாளிதழில் 19.7.2017ல் தலைப்பு செய்தியில், ‘சிறையை விட்டு வெளியேறி ஷாப்பிங் சென்ற சசிகலாவின் வீடியோ வெளியானது’ என்ற தலைப்பில் தலைப்பு செய்தியாக பிரசுரம் ஆனது. அதன் பின்னர்தான் சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும், அவருக்காக தனி அறைகள், சமையலறை ஒதுக்கப்பட்ட விஷயமும் வெளியே தெரிந்தது. டிஜஜி ரூபாவின் பேட்டியையும் வாசகர்களுக்காக விரிவாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

 • turkey_dust_storm

  துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • republic_vilaaa

  குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்