SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜ்நாத் சிங் நம்பிக்கை டோக்லாம் பிரச்னைக்கு விரைவில் சுமூக தீர்வு

2017-08-22@ 00:39:31

புதுடெல்லி : சிக்கிம் மாநில எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு மாதங்களுக்கு முன், சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால், அப்பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரும்  குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கிருந்து இந்திய ராணுவம் நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும் என்று சீனா எச்சரித்து வருகிறது. ஆனால், எந்தவிதமான சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் உள்ளதாக மத்திய அரசு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணும்படி இருநாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தோ - திபெத் எல்லை போலீசார் படை சார்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், ‘‘இந்தியா - சீனா இடையிலான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இந்த விவகாரத்தில் சாதகமான முடிவை எடுக்க சீனா முன்வரும் என்று நம்புகிறேன். அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது. தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டையும், எல்லைகளையும் பாதுகாக்கும் பலம் நமது ராணுவத்துக்கு உள்ளது’’ என்றார்.

ஆயிரத்தில் ஏன்? லட்ச்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupatibrammorchavam2017

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் விழா: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  • NIRMALASitharaman

    டெல்லியில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

  • sachinswach

    தூய்மையே சேவை: தனது மகனுடன் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்

  • RAHULGANDHI

    குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார யாத்திரை

  • madurainavarathiri

    நவராத்திரி திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்