SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

2017-08-22@ 00:37:01

புதுடெல்லி : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உட்பட மூன்று பேர் தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும்  கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், தங்களுக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மே 3ம் தேதியன்று சசிகலா உட்பட மூன்று பேரின் சார்பாகவும்  தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் சுமார் 90 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2ம் தேதியன்று விசாரணைக்கு வரவிருந்தது.

அப்போது முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி திபதி ரோகிந்தன் பாலிநாரிமன் கர்நாடகாவின் மூத்த வழக்கறிஞரான பாலிமன் நாரிமனின் மகன் ஆவார். பாலிமன் நாரிமன் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வாதிட்டு ஜாமீன் பெற்று தந்தவர். இந்த நிலையில் தற்போது சசிகலா சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவை அவரது மகன் ரோகிந்தன் பாலிநாரிமன் விசாரணை மேற்கொண்டால் சட்டரீதியாக மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்க நேரிடும். என தெரிவித்தார். இதையடுத்து மனு மீதான அடுத்த விசாரணையை தேதியை எதுவும் குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஒரு அறிவிப்பை வெளிட்டது. அதில், “சசிகலாவின் சீராய்வு மனு, ஆகஸ்ட் 22ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். நீதிபதிகள் அமித்தவராய் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்