SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் நடந்த பாஜ முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

2017-08-22@ 00:36:18

புதுடெல்லி : டெல்லியில் பாஜ ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கூட்டத்தில், கட்சி தலைவர் அமித்ஷா பங்கேற்றார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 2019ல் ஆளுங்கட்சியாக மக்களவை தேர்தலை பாஜ சந்திக்க உள்ளது. இதிலும் தனிப்பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை தக்க வைக்க அக்கட்சி, இப்போதே தீவிரமாக களமிறங்கி உள்ளது. மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கான பொறுப்புகள் அடங்கிய செயல் திட்டத்தை கட்சி தலைவர் அமித்ஷா சமீபத்தில் வழங்கினார். கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இம்முறை வெற்றி பெற பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 6 துணை முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் 3வது முறையாக நேற்று நடந்தது.  தமிழகம், பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை தொடர்ந்து சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டு, முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மத்திய அரசின் முன்னோடித் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் மாநில முதல்வர்கள், பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். தேர்தலுக்கு தயாராக மாநில முதல்வர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Okenakal

    ஓகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் : படகு சவாரி செய்து உற்சாகம்

  • 20-11-2017

    20-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்