SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணியில் முறைகேடு 12 நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு: ஜார்கண்ட் ஐகோர்ட் அதிரடி

2017-08-13@ 19:35:23

ராஞ்சி: ஜார்கண்டில் பணியில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கிய 12 நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்டில் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர்களது செயல்பாடுகள் மற்றும் நடத்தைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் நிதி காரே கூறுகையில், மாவட்ட நீதிபதிகள் 12 பேரின் பணியில் மற்றும் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக ஐகோர்ட் தனது துறை ரீதியான விசாரணையில் கண்டறிந்தது. இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதன் அடிப்படையில் 12 மாவட்ட நீதிபதிகளுக்கு பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்துள்ளது. இதையொட்டி அவர்களுக்கு 3 மாத சம்பளம் மற்றும் சலுகை தொகை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதுகுறித்து மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட நீதிபதிகளின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக ஏற்கனவே ஐகோர்ட்டில் இருந்து மாநில அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கவும் ஐகோர்ட் முடிவு செய்தது. இதில் லோகர்தகா, தல்தோன்சஞ்ச், பாகூர், கர்வா, லதேகர் ஆகிய மாவட்ட நீதிபதிகளும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ராம் ஜீயாவன் உள்ளிட்ட 12 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். பணியில் முறைகேடு காரணமாக 12 நீதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட சம்பவம் ஜார்கண்டில் நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்