SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உ.பி. மருத்துவமனையில் 60 குழந்தைகள் இறப்பு: ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனையாளரிடம் விசாரணை நடத்தப்படும்: முதல்வர் யோகி அறிவிப்பு

2017-08-13@ 18:54:55

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் அடுத்தடுத்து 60 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தடை பட்டது காரணமா என்பது குறித்து விசாரணை நடததப்படும் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 60 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த எம்பி தொகுதியாகும். குழந்தைகளின் இறப்புக்கு குறை பிரசவம் மற்றும் மூளை வீக்க நோய் ஆகியவைதான் காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அங்கு சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் தடை பட்டதாகவும், இதனால் குழந்தைகள் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதே போல் மருத்துவ உயர்கல்வித்துறை அமைச்சர் அசுதோஷ் கூறுகையில், கடந்த 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளின் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும், அந்த மருத்துவமனையில், உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த 567, 668 மற்றும் 587 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறுகையில், இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைத்துள்ளோம். குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் தான் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்கான அனுமதி அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இதுகுறித்தும் விசாரிக்கப்படும். மருத்துவ கல்லூரியின் முதல்வரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை பாயும். உத்தரபிரதேசத்தில் ஜப்பானிய வகையான மூளை வீக்க நோய் குழந்தை இறப்புக்கு ஒரு மிகப் பெரிய சவாலாக உள்ளது. சுகாதார குறைவு மற்றும் திறந்த வெளி கழிப்பறைகள் காரணமாக இது போன்ற தொற்றுகள் உருவாகின்றன. இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று என்பதால் ஊடகங்கள் ஊதி பெருக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ உயர்கல்வித்துறை அமைச்சர் அசுதோஸ் கூறுகையில், சிலிண்டர் சப்ளை நிறுவனத்தினர் கடந்த 1ம் தேதி அரசை அணுகி நிலுவையில் இருக்கும் தொகையை கேட்டுள்ளனர். கடந்த 5ம் தேதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 11ம் தேதிதான் தங்களது கணக்குக்கு தொகை மாற்றப்பட்டதாக சிலிண்டர் நிறுவனத்தினர் தெரிவித்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத், சுகாதாரத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் ஆகியோர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

 • turkey_dust_storm

  துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் வீசிய புழுதிப் புயல்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • republic_vilaaa

  குடியரசு தின விழா : வண்ணமயமான ஒளியில் மின்னும் ராஷ்திரபதி பவன்

 • 20-01-2018

  20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்