SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.3.09 கோடி உண்டியல் காணிக்கை: 93 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

2017-08-13@ 14:56:06

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.3.09 கோடி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் நேற்று 93ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சனி, ஞாயிறு, கிருஷ்ண ஜெயந்தி (திங்கள்), சுதந்திர தினம் (செவ்வாய்) என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. அலிபிரி மலைப்பாதையில் 14 ஆயிரம் டிக்கெட்டுகளும், வாரி ெமட்டு மலை பாதையில் 6ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படுவதாகல் அதனை பெறுவதற்காக பக்தர்கள்  அதிகளவு முண்டியடித்தனர்.

பக்தர்கள் அறைகள் பெறுவதற்கு ஆதார் மற்றும் செல்போன் எண்களை வழங்கி பதிவு செய்வதற்காக 2 மணிநேரம் வரிசையில் காத்திருந்தனர். அதேபோல் அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து வழிப்பட்டால், நினைத்து நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக நேற்று ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தேங்காய்களை உடைத்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 93 ஆயிரத்து 290 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். அறை கிடைக்காத பக்தர்கள் வெளியே காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ₹300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள், டிக்கெட்டில் குறிப்பிட்டபடி 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் 2மணி நேரம் வரிசையில் காத்திருந்து 57ஆயிரத்து 214 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.  நாளையும் நாளை மறுதினமும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரிக்கலாம் என தெரிகிறது. நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ.3.09 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு முதல் திருப்பதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்