SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக மக்கள் நன்றாக இருக்க தமிழக அரசை கலைக்க வேண்டும்: மு.க ஸ்டாலின்

2017-08-13@ 08:29:04

சென்னை: தமிழக  மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். லண்டன் செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வமோ, எடப்பாடி பழனிச்சாமியோ யார இருந்தாலும்  கவலை இல்லை என்று கூறினார்.

நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காகவும், மக்கள் படும் அவதிகளுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்பதற்காகவும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு இரவு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். ஒரு வாரம் தங்கி இருந்து 20ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்