SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணிச்சுமை காரணமாக தமிழகத்தில் ஒரேநாளில் 4 காவலர்கள் மரணம்

2017-08-13@ 06:32:04

சென்னை: தமிழகத்தில் 1.18 லட்சம் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் இரவு ரோந்து உள்பட பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனவே, காவலர்களுக்கு தினமும் 16 மணிநேரம் வரை வேலை வழங்கப்படுகிறது. மேலும், விடுமுறை கூட இல்லாமல் பணியாற்றுவதால் காவலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 4 காவலர்கள் பணிச்சுமையால் தங்களது உடல்நலத்தை கவனிக்க முடியாமல் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. மதுரை அண்ணா நகர் குற்றப்பிரிவு காவல் நிலைய  சிறப்பு உதவியாளர் விவேகானந்தன் பணிச்சுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் அதிகமாகி மரணமடைந்தார்.  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் தேவி உடல்நலம் சரியில்லாத நிலையில் விடுப்பு எடுக்க முடியாததால் பணிக்கு வந்துள்ளார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

திருச்சி ஆயுதப்படை காவலர் லியோ ஜோசப் பணிச்சுமை காரணமாக உடலை பரிசோதிக்காமல் விட்டதால் மாரடைப்பால் மரணமடைந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் பணியாற்றி கடந்த 12 நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் தினகரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்