SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் பயங்கரம் குவெட்டா நகரில் குண்டு வெடித்து 17 பேர் பலி

2017-08-13@ 06:18:45

கராச்சி : பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நேற்று பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் முக்கிய நகரமான குவெட்டாவில் பிஷின் பஸ் நிறுத்தம் அருகே வாகனத்தில் வைக்கப்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. ஆனால், இது தற்கொலை படை தாக்குதலா அல்லது திட்டமிட்டு வாகனத்தில் குண்டுவைத்து வெடிக்கச் செய்யப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது என்று பலுசிஸ்தான் மகாணத்தின் உள்துறை அமைச்சர் மிஹ் சர்பரஸ் பட்டி தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

  • colambiaparaglidingworldcup

    கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்