SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - சீனா போர் பதற்றம் எதிரொலி மும்பை பங்குசந்தைக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு

2017-08-13@ 01:44:15

மும்பை : மும்பை பங்கு சந்தை கடந்த 4 நாட்களில் ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. இந்தியா - சீனா போர், அமெரிக்க வடகொரியா போர் அச்சம் காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மும்பை பங்கு சந்தை அண்மையில் 30 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 20 ஆயிரம் புள்ளிகளை கடந்ததே சாதனையாக கருதப்பட்டது. கடந்த 7ம் தேதி மும்பை பங்கு சந்தையின் மதிப்பு ரூ. 139 லட்சம் கோடியாக உச்சத்தில் இருந்தது. கடந்த 4 நாட்களில் இதன் மதிப்பு ரூ. 133 லட்சம் கோடியாக சரிந்து விட்டது. அதாவது கடந்த 4 நாட்களில் சுமார் 1000 புள்ளிகளை மும்பை பங்கு சந்தை இழந்துள்ளது.

இதன் மூலம் ரூ. 6 லட்சம் கோடி இழப்பை மும்பை பங்கு சந்தையும், அதில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக வடகொரியா அமெரிக்க போா் பதற்றம், சிக்கிம் எல்லையில் இந்தியா - சீனா போர் பதற்றம் கூறப்படுகிறது. இது தவிர 331 ஷெல் கம்பெனிகளில் பங்குகள் பரிவர்த்தனை கூடாது என  கடந்த செவ்வாய்க்கிழமை முதல் செபி தடை விதித்திருப்பதும் காரணமாக கருதப்படுகிறது. வடகொரியா போர் பதற்றம் உலக நாடுகளின் பங்கு சந்தையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டோ ஜோன் மற்றும் எஸ் அண்டு பி பங்கு சந்தை தலா 1 சதவீதம் மற்றும் 1.45 சதவீதம் சரிந்துள்ளன. இங்கிலாந்து பங்குசந்தை 1.5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்