SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை தொழிலாளி சிகிச்சை கிடைக்காமல் பலி விசாரணை நடத்த டாக்டர்கள் குழு நியமனம்: 48 மணிநேரத்தில் அறிக்கை தர கேரள அரசு உத்தரவு

2017-08-13@ 01:41:05

திருவனந்தபுரம் : கொல்லத்தில் விபத்தில் சிக்கி  சிகிச்சை கிடைக்காமல் இறந்த நெல்லை தொழிலாளி விவகாரம் குறித்து விசாரிக்க, 3 பேர் கொண்ட டாக்டர் குழுவை கேரள அரசு நியமித்துள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த சாலை விபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லையை சேர்ந்த முருகன் படுகாயமடைந்தார். அவரை 5 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் வெண்டிலேட்டர் வசதி இல்லை என்பது உட்பட பல காரணங்களை கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர். இதில் அவர் பல மணி நேரம் உயிருக்கு போராடி ஆம்புலன்சிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்திற்கு சட்டப்பேரவையில் முதல்வர் பினராய் விஜயன், பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு நியமித்துள்ளது.

இந்த குழுவில் கேரள சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் சரிதா தலைமையில் மருத்துவக் கல்வி இணை இயக்குனர் டாக்டர் குமாரி, திருவனந்தபுரம் பொது மருத்துவமனை மயக்கவியல் துறை டாக்டர் விபின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 48 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் சதானந்தன் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர இந்திய மருத்துவ சங்கமும் இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

  • 378chennaiDAY

    ஹேப்பி பர்த்டே: சென்னைக்கு இன்று 378வது பிறந்த நாள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்