SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழிந்துவரும் மருத்துவ குணமுடைய இலுப்பை மரங்கள்: பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

2017-08-13@ 01:31:09

திருவள்ளூர் : கொசுக்களை உண்டு வாழும் வவ்வாலின் உணவு, ஏழைகளின் நோயை போக்கும் எளிய வகை மருந்து என பல்வேறு பண்பு கொண்ட இலுப்பை மரங்கள் அழிந்து வருகின்றன. இருக்கும் மரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலுப்பை எண்ணெய் “ஏழைகளின் நெய்’’ என்று அழைக்கப்படுகிறது. இலுப்பை பூவில் 73 சதவீதம் சர்க்கரை உள்ளது. ஒரு டன் உலர்ந்த பூவிலிருந்து 95 சதவீத ஆல்கஹால், 405 லிட்டர் பிரித்தெடுக்கலாம். சோப்பு, மருந்து, தலைமுடி தயாரிக்க, தோல் பளபளபாக்க, மிதமான சூட்டுடன் உடலை வைக்க என பல்வேறு நற்குணங்களை இலுப்பை மரத்து விதை எண்ணெய் கொண்டுள்ளது.

பூவின் ரசமானது நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பயன்படுகிறது. இருமல், நெஞ்சு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் ஓர் ஊட்டசத்து மிக்க டானிக். விதை களிம்பு சதை பிடிப்பு, களைப்பு, மூட்டு வலி, தசை இறுக்கம் ஆகியவற்றுக்கு வலி நிவாரணியாக பயன்படும். மரப்பட்டையின் சாறு அல்சர், பற்களில் ரத்த கசிவை குணப்படுத்தும். நூறு ஆண்டுக்கு முன்பு வரை ஊர் ஊருக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்த காலம் போய், பல கிராமங்களில் ஒரேயொரு இலுப்பை மரத்தைக் கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது. ‘’இலுப்பை மரமா... அது எப்படி இருக்கும்?’’’’ என்று இன்றைய தலைமுறை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி அழிவின் விளிம்பில் உள்ள இலுப்பை மரங்களை தமிழக அரசு மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்கின்றனர் கிராம பெரியவர்கள்.

நோய் தீர்க்கும் இலுப்பை பூக்கள்

இலுப்பைப் பூ கூட அற்புதமான மருந்து. இதை மூணு நாள் காய வைத்து மண் சட்டியில வறுத்து சாப்பிட்டால் தோல் சம்பந்தபட்ட வியாதி, விரைவாத நோய் குணமாகும். இலுப்பைப் பூ, கருப்பட்டி, சீரகம், மிளகு சேர்த்து இடித்து, உருண்டையாக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தால் சளித்தொல்லை நீங்கும். இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளித்தாலும் தோல் நோய்கள் நீங்கும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகு காணாமல் போகும். முடி கொட்டுவதும் நிற்கும். இதை, சர்வரோக நிவாரணினே சொல்லலாம் என்கின்றனர் கிராம மக்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Christiansmanila

  மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

 • 22-01-2018

  22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-01-2018

  21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • Hungarystudentsstruggle

  ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

 • colambiaparaglidingworldcup

  கொலம்பியாவில் உலகக் கோப்பை பாராகிளைடிங் போட்டி: பல்வேறு பகுதியிலிருந்து வீரர்கள் உற்சாகமாக பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்