SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இவர்களும் பிரபலம் தான் சிந்தி காளை...தலச்சேரி ஆடு, அஜீர் கோழி: மந்திகிரி போனால் பார்க்கலாம்

2017-08-13@ 01:30:34

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை உள்ளது. இந்த பண்ணை சுமார் 1,641 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1824ம் ஆண்டு ஆங்கிலேய ராணுவத்திற்காக குதிரைகள் வளர்ப்புக்காக உருவாக்கப்பட்டது. இந்த பண்ணை 1924ம் ஆண்டு விவசாயத்துறைக்கு வழங்கப்பட்டது. மீண்டும் 1938ம் ஆண்டு கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை இனப்பெருக்க மையமாக மாற்றப்பட்டது. இந்த கால்நடை அபிவிருத்தி பண்ணை 1970ம் ஆண்டு கால்நடை ஆய்வு மற்றும் பால் உற்பத்தி மையமாகவும் மாற்றப்பட்டது.
இந்த பண்ணையில் காங்கேயம், சிந்தி மற்றும் கலப்பின காளைகள் வளர்க்கப்படுகிறது. பின்னர், கலப்பின கால்நடை உற்பத்திக்காக வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

மேச்சேரி செம்மறி ஆடுகள், சேலம் கருப்பு, தலச்சேரி கொடி ஆடுகள், லார்ஜ் வைட்யாரக்சேர் வகையான வெண்பன்றிகள், அஜிர் வகை கொண்ட கோழிகள், சத்தியதரோரெட் குதிரைகளும் வளர்க்கப்படுகிறது.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள நாட்டு மாடுகளில் பால் சுறக்கும் தன்மை குறைவாக இருக்கும். உயர் ரக மாடுகளில் அதிகமாக பால் சுறக்கும். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதிகப்படியான பால் சுறக்கும் மாடுகளை ஆவின் பால் மையத்தினரின் மூலம் கண்டறியப்படுகிறது. உயர் ரக மாடுகளின் காளை மூலம் விந்து எடுக்கப்பட்டு கலப்பின மாடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், மேச்சேரி செம்மறி ஆடுகளுடன் சேலம் கருப்பு தலச்சேரிகொடி ஆடுகளை கலப்பினம் செய்து, விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர நாட்டில் அதிகமாக பால் சுறக்கும் மாடுகளை கண்டறிந்து அந்தந்த ஊர்களிலேயே கருமாற்று முறையில் விந்துகளை செலுத்தி காளை கன்றுகள் பிறந்தால் பண்ணை எடுத்துக்கொள்ளப்படுகிறது. பெண் கன்றுகள் ஈன்றால் விவசாயிக்கு வழங்கப்படுகிறது. கால்நடை பண்ணையில் உள்ள மாடுகளில் இருந்து கிடைக்கும் சுத்தமான பால் நாள் ஒன்றுக்கு 200 லிட்டர் ஆவின் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திகிரியில் உள்ள ஓசூர் கால்நடை பண்ணை வளாகத்தில் லார்ஜ் வைட்யாரக்சேர் வகையான வெண்பன்றிகள், அஜிர் இன கோழிகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படுகிறது. ஓசூரின் தட்பவெப்ப நிலைக்கேற்ப இந்திய நாட்டு வகை மரங்கள், ஏரிகள், குட்டைகள், சிற்றாறுகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான மேய்ச்சல் நிலங்கள் கால்நடை பண்ணை வளாகத்தில் உள்ளன.

நாய்களுக்கு கல்லறை

1890 முதல் 1972 வரையில், சுமார் 82 ஆண்டுகளில் 9 நாய்களுக்கு கல்லறை கட்டப்பட்டு நினைவு கல் வைக்கப்பட்டுள்ளது. அதில், பொரிக்கப்பட்டுள்ள நாய்களின் பெயர்களான நான்சி, ஜோகி, விட்ச், சலின், ராணி போன்றவை தற்போதும் தெளிவாக தெரிகிறது. இந்த அறிய பொக்கிஷங்களை காக்க வேண்டும். ஓசூர் நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ள இந்த கால்நடை பண்ணையை சுற்றிலும் வேலி அமைத்து தர வேண்டும். அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தந்து மேலும் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டால் ஓசூர் நகரம் மேலும் வளர்ச்சி அடையும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

  • afghan_payirr

    சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

  • therthal_pracha

    நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

  • fusion_complexxx

    ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

  • idaitherthal_11

    சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்