SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுபடை வீட்டில் இருந்து அற்புத இசை பழநி தவிலுக்கு கேரளாவில் மவுசு: தஞ்சை, கும்பகோணத்தை அடுத்து பிரபலம்

2017-08-13@ 01:30:01

பழநி : அறுபடை வீடுகளுள் ஒன்றான பழநியில் தயாரிக்கப்படும் தவிலுக்கு தனித்துவமான ஒலி உள்ளது. இதனால் இங்கு தயாராகும் தவிலுக்கு கேரளாவில் மவுசு அதிகரித்துள்ளது. தவில் என்றாலே தமிழ்நாட்டில் தஞ்சாவூர்தான் ரொம்பவும் பிரபலம். தமிழகத்தின் பாரம்பரிய இசை வாத்தியங்களில் ஒன்றான தவில், தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்டங்களில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. தஞ்சாவூர் தவில் ₹15 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரம் வரையிலும், கும்பகோணம் தவில் ₹2 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரம் வரைக்கும் விற்பனை  செய்யப்படுகிறது. இலங்கை யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்படும் தவிலுக்கும் மவுசு அதிகம். யாழ்ப்பாண தவில் ₹20 ஆயிரத்தில் இருந்து ₹26 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இங்கு மட்டுமே கேட்டு வந்த தவில் சத்தம், தற்போது திண்டுக்கல் மாவட்டம், பழநி பக்கமும் கேட்க துவங்கியுள்ளது. பழநியை சேர்ந்த மாரிமுத்து கை வண்ணத்தில் தயாராகும் தவில், கேரளாவிற்கு அதிகளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதுகுறித்து தவில் தயாரிப்பாளர் மாரிமுத்துவிடம் கேட்டபோது... ‘‘தவில்கள் அனைத்தும் அகினி பலா, ஆண் பலா, பெண் பலா மரங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றன. காலங்காலமாக நமது முன்னோர் இசைத்து வந்தது குமுலன் மரம், பூவரசன் மரம், வேங்கை மரக்கட்டைகள் தான். இம்மரங்களில் உருவாக்கப்படும் இசைக்கருவிகளில் வரும் சத்தமே தனித்துவமாக இருக்கும். தற்போது நான் வடிவமைக்கும் தவில் பழங்கால அளவுகளை அடிப்படையாக கொண்டவை.  சாதாரண உளியின் மூலம் இதனை உருவாக்கி வருகிறேன். தற்போது தவில் விலை ₹7 ஆயிரத்தில் இருந்து ₹8 ஆயிரம் வரை விற்பனையாகிறது. கேரள மாநிலத்தில் இத்தவில் இசைக்கருவிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அங்கிருந்து ஏராளமானோர் வந்து வாங்கி செல்கின்றனர்.

தவில் தயாரிப்பு இயந்திரம் வாங்க ₹2 லட்சம் வரை செலவாகும். ஆனால், போதிய வசதியில்லாததால் கையினாலேயே கடைந்து தவில் செய்து வருகிறேன். ஒரு தவில் செய்ய ஒரு வாரமாகும். உள்வட்டம், ஆரம் போன்றவை யாவும் பண்டைய கால அளவுகளை அடிப்படையாக கொண்டவை. இயந்திரமாக இருந்தால் ஒரு தவிலை 2 நாட்களில் செய்து முடிக்க முடியும். வங்கிகளில் கடனுதவிக்கு விண்ணப்பித்தால் அலட்சியப்படுத்தி திருப்பி அனுப்பி விடுகின்றனர். தமிழகத்தில் 2 லட்சம் தவில் கலைஞர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு முன்வர வேண்டும்...’’ என்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2017

  21-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

 • commissioner_chni_open

  சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

 • vina_prasanna_1

  சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

 • KanthaShashtifestival

  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

 • naagai_depott

  பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்