SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 1.16 லட்சம் கிணறு மூடல் தரிசானது 1.7 லட்சம் ஹெக்டேர் நிலம்

2017-08-13@ 01:22:52

கோவை : தமிழகத்தில் 58.89 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பு உள்ளது. இதில், மழை, நிலத்தடி நீர், கிணற்று நீர், ஆற்று நீர் பாசனத்திற்கு ஏற்ப விவசாய பயிர் சாகுபடி நடக்கிறது. நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியால் விவசாய பயிர் சாகுபடியில் மாற்றம் காணப்படுகிறது.பொதுப்பணித்துறை சார்பில் மாநில அளவில் 25,534 குளம், 17,112 சிறு குட்டை, தடுப்பணை பராமரிக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறைகளின் கட்டுப்பாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குளம், கசிவு நீர் குட்டை உள்ளது. 60 சதவீத விவசாய நிலங்கள் குளம், குட்டை, ஆற்று நீர் பாசனத்தை நம்பியே இருக்கிறது. இதர விவசாய நிலங்களில் ஆழ்குழாய், கிணற்று நீர் பாசனம் மற்றும் மழை நீர் மூலமாக பயிர் சாகுபடி நடக்கிறது. கடந்த சில ஆண்டாக விவசாய பயிர் சாகுபடியில் சொட்டு நீர் பாசன திட்டம் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. ஆனால், மாநில அளவில் 12.54 சதவீதம் விவசாயிகள் மட்டுமே சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு மாறியுள்ளனர். குறு விவசாயிகளுக்கு, குறிப்பாக 5 ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு மானிய ஒதுக்கீடு இல்லாததால் சொட்டு நீர் பாசன திட்டம் எட்டாக்கனியாக இருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆண்டுக்கு ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு மட்டும் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் கிடைக்கிறது. மழை நீர் சேகரிப்பு, குளம், குட்டை சீரமைப்பு பணி நடக்காத காரணத்தாலும், நிலத்தடி நீர் இல்லாத காரணத்தாலும், மாநில அளவில் கடந்த 3 ஆண்டுகளில், 1.7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தரிசாக மாறி விட்டது. மாநிலம் முழுவதிலும் 15,89,216 கிணறு இருந்தது. இதில் கடந்த 3 ஆண்டில் 1,16,479 கிணறு நீரில்லாமல் மண் மூடி அழிக்கப்பட்டு விட்டது. அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்த 1,60,607 ஆழ்குழாய் கிணறுகளில் பெரும்பாலானவை நீரின்றி முடங்கி கிடக்கிறது. மாநில அளவில் குளம், கசிவு நீர் குட்டை, நீர் வாய்க்கால் போன்றவற்றை ஆக்கிரமித்து 1.67 லட்சம் வீடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குளம், குட்டைகள், நீர் தேக்க தகுதியை இழந்து, சமவெளியாக, மைதானமாக மாறி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும், விவசாயமும் குறைந்து வருவதால் காய்கறி விலை உயர்ந்து வருகிறது.

சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகளும், காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.நடப்பு தென்மேற்கு பருவ மழை சீசனில் இதுவரை 28% குறைவாக மழை பெய்துள்ளது. குடிமராமத்து திட்டம், வண்டல் மண் அள்ளி பணம் குவிக்கும் திட்டமாக மாறிவிட்டது. ஷட்டர், வாய்க்கால் பராமரிப்பில்லாததால் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து முற்றிலும் முடங்கிவிட்டது. 17,000 பொதுப்பணித்துறை குளம், 10,000 குட்டை, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி துறையின் கசிவு நீர் குட்டை,சிறு தடுப்பணை என எல்லாம் நீரின்றி காய்ந்து கிடக்கிறது. ‘குப்பை தொட்டி’ கிணறுகள்:  பொதுஇடங்களில் உள்ள பயனற்ற திறந்தவெளி கிணறுகளில் மக்கள் தவறிவிழும் அபாயம் இருப்பதால், கிணறுகளை மூடி வருகின்றனர். பயன்பாடில்லாத கிணறுகள் குப்பை தொட்டிகளாக மாறி வருகிறது. கிணறுகள் அழிக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் சரிகிறது என்கிறார்கள் பொதுப்பணித்துறையினர்.

நீர் சேகரிக்க ‘டம்மி தொட்டி’

கடந்த 3 ஆண்டில் மாநில அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய கட்டுமானம் உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சிகளின் அனுமதி பெற, ‘டம்மி மழை நீர் தொட்டி’ உருவாக்கி அனுமதி பெற்று வருகிறார்கள். அரசு துறை கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்படவில்லை. மழையால் நகர், புறநகர், கிராமங்கள் வெள்ளக் காடாக மாறுகிறது. ஆனாலும், மழைநீர் சேகரிக்க, நீர்வழிப்பாதை அடைப்பை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் இல்லை.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2017

    23-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • BigbEN4anduER

    பராமரிப்புக்காக பிக் பென் கடிகாரம் 4 ஆண்டுக்கு நிறுத்தம்

  • stuNNNINsatelliIMAG

    சூரிய கிரகணத்தின் அதிர்ச்சியூட்டும் செயற்கைக்கோள் படங்கள் : நாசா வெளியீடு

  • sOlarapoERALAMP

    தமிழக அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட உள்ள சூரிய மின் விளக்குகள் அஞ்சலக விழாவில் அறிமுகம்

  • Singaporecollision

    சிங்கப்பூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க போர்க் கப்பல் மோதல்: 10 பேர் காணவில்லை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்