SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிலைகள் கடத்தல் தடுக்க அரசு மியூசியங்களில் கேமரா, அலாரம்

2017-08-13@ 01:14:34

சென்னை : தமிழகத்தில் சென்னை,கோவை, சிவ கங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, நீலகிரி, வேலூர், நாகப்பட்டணம், விருதுநகர், திருநெல்வேலி,கன்னியாகுமரி, சேலம், கிருஷ்ணகிரி,கரூர், ஈரோடு, ராமநாதபுரம்,கடலூர், காஞ்சிபுரம், திருச்சியில் தொல்லியல் துறையின் அருங்காட்சியகம் (மியூசியம்) செயல்பட்டு வருகிறது. இந்த மியூசியங்களில் விலை மதிக்க முடியாத ஐம்பொன் சுவாமி சிலை, பழங்கால மக்கள் பயன்படுத்திய அரிய பொருள்,ரத்தினம்,பவழம், முத்துக்களில் தயார் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள்,கற்கால பொருட்கள், பலவகையான செப்பேடுகள்,மன்னர் காலத்திய பொருட்கள், ஆபரணம், ஓலைச்சுவடி, அரிய வகை கற்கள் போன்றவை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில், சிலை மற்றும் அரிய பொக்கிஷங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. தமிழக மியூசியங்களில் பொக்கிஷபொருட்கள் தூசி, குப்பை படிந்து, கவனிப்பாரின்றி கிடக்கிறது.

தமிழகத்தில் சமீபத்தில் சிக்கிய சிலை கடத்தல் குற்றவாளிகள், ‘‘ மியூசியம், தொல்லியல் காப்பகங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன்னில் தயாரிக்கப்பட்ட நடராஜர், சிவன், அம்மன் சிலைகள் இருக்கிறது.ஆதிகால மக்கள் பயன்படுத்திய சுடுமண் பொருட்கள் குவிந்துள்ளது. இவற்றை வாங்க வெளிநாட்டினர் போட்டி போடுகிறார்கள்’’ என வாக்குமூலம் அளித்தனர்.  இக்கும்பல், மியூசியங்களில் குவிந்துள்ள அரிய பொருட்களை போட்டோ, வீடியோ எடுத்து அதே போல் போலி சிலைகளை வைத்துவிட்டு, ஒரிஜினல் சிலைகளை கடத்த திட்டமிட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது. சென்னை எழும்பூரில் 1851ம் ஆண்டில் துவக்கப்பட்ட,இந்தியாவின் இரண்டாவது பழமையான அரசு மியூசியம் உள்ளது. இங்கு, பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள், காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிக்கூட சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், கடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

பாதுகாப்பு குறைபாடுகளால் அரிய பொக்கிஷங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க தமிழக அரசு, உயர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது. அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட 20 அரசு மியூசியங்களில் சி.சி.டி.வி ‘நெட்வொர்க்’ கண்காணிப்பு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை, சென்னை தொல்லியல் துறை கட்டுபாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘’அடுத்த மாதம் அனைத்து அரசு மியூசியங்களிலும் பாதுகாப்பு கருவிகள், அலாரம் போன்றவை அமைக்கப்படும். ரகசிய குறியீடு மூலமாக ஒரிஜினல் சிலைகள், காட்சி ெபாருட்கள் அடையாளப்படுத்தப்படும். இதன்மூலமாக, மியூசியங்களில் உள்ள ெபாக்கிஷ பொருட்கள் பாதுகாக்கப்படும்’’ என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-07-2018

  18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

 • nanteswarcowmarriage

  நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

 • LavaBombHawaii

  ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்