SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் திருப்பம் அதிமுக அணிகள் இணைய மோடி கெடு: எடப்பாடியிடம் கண்டிப்பு ஓபிஎஸ்சை சந்திக்க மறுப்பு

2017-08-13@ 01:11:53

சென்னை : ஒரு பக்கம் தினகரன் மிரட்டல்களை தொடர்ந்து இன்னொரு பக்கம் அதிமுக இணைப்பு வழிகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், அதிமுக அணிகள் இணைய பிரதமர் மோடி கெடு விதித்துள்ளார். டெல்லியில் எடப்பாடியை சந்தித்த மோடி, அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்து விட்டதற்கு இது தான் காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன;  இரு அணியினரும் இணைந்து  வாருங்கள் என்று எடப்பாடியிடம் கண்டிப்புடன் பிரதமர் கூறியுள்ளதால், தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓபிஎஸ் அணி என்று  2 அணிகளாக பிரிந்தது; அதன் பின், சசிகலாவை எடப்பாடி ஒதுக்க ஆரம்பித்தார். சசிகலா சிறைக்கு போன பின், தினகரனுடன் பனிப்போர் வலுத்து கடைசியில் அவரையும் ஒதுக்கி விட்டார். இப்போது தினகரன், எடப்பாடி,  ஓபிஎஸ் அணிகள்  என்று அதிமுக 3 அணிகளாக பிரிந்துள்ளது. அதில் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக  உருவாக வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். மேலும்,  ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த நிபந்தனைகளை ஏற்றால் இரு அணிகளும் இணையும் என்றார்.
 
அதில் தற்போது  சசிகலா மற்றும் தினகரனை ஏற்க முடியாது என்று எடப்பாடி தலைமையில் கூடிய  அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில்  சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி  ஏற்கனவே 2 முறை தன்னை சந்தித்த எடப்பாடி, முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தெரிவித்தார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம்  அணியினர், வெளிப்படையாக 2 நிபந்தனைகளை வைத்தாலும், முதல்வர் பதவி அல்லது  கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனைகளை முதல்வர் எடப்பாடி அறவே ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை முறிந்து விட்டது. பேச்சு இழுபறியான நிலையில் அடுத்த திருப்பம் ஏற்பட்டது; தற்போது, கட்சியில் இருந்து தினகரன் முற்றிலும்  ஓரங்கட்டப்பட்டதாக அறிவித்ததால் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று  தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். அதேநேரத்தில், அதிமுக இணைப்பு  நடைபெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2  நாட்களுக்கு முன்னர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, துணை ஜனாதிபதி  வெங்கையா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.  இருவரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர். பின்னர் இரு தரப்பினரும்  பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கேட்டனர்.

ஆனால் நாடாளுமன்ற  வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது தம்பித்துரை மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர்  உடன் இருந்தனர். அதன்பின்னர், பிரதமரிடம் முதல்வர் பழனிச்சாமி தனியாக  பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும்  தனியாக விவாதித்தனர்.  தினகரன் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டதால் அதிமுகவின் இரு  அணிகளும் இணைய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டு கட்சிக்குள் சசிகலா,  தினகரன் ஆகியோரையோ அவர்களது குடும்பத்தினரையோ சேர்க்கக் கூடாது என்றும்  அவர் விடாப்பிடியாக கூறியுள்ளார்.  ஆனால் பன்னீர்செல்வத்தை சந்திக்க மோடி மறுத்து  விட்டார். அதிமுகவின் இரு அணிகளும் இணையுங்கள்.

இருவரும் பதவிக்காக போட்டி  போட வேண்டாம். பன்னீர்செல்வம் அணியில் தற்போது 10 எம்எல்ஏக்கள் மட்டுமே  உள்ளனர். இதனால் முதல்வர் பதவி, பொதுச் செயலாளர் பதவி என்று வீண் பிடிவாதம்  பிடிக்க வேண்டாம். பதவியை அனுபவிக்க நினைக்க வேண்டாம்.  இரு அணிகளும் இணைந்து டெல்லிக்கு வந்து என்னை சந்தியுங்கள். அதுவரை நான் பார்க்க விரும்பவில்லை  என்று மோடி திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால்தான் பன்னீர்செல்வம்  நேற்று மோடியை தனியாக சந்திக்க முடியாவில்லை. இதனால் டெல்லி மற்றும் மும்பை  அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் இரு அணிகளும்  இணைய வேண்டும் என்று மோடி வற்புறுத்தியுள்ளதால் பன்னீர்செல்வம் 15ம் தேதி  சென்னை திரும்பிய பிறகு அதிமுக இணைப்பு பேச்சுவார்த்தை வேகம் எடுக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்