SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெய் நகர் பார்க் அருகே நடுரோட்டில் மாநகராட்சி குப்பை லாரி தீப்பிடித்து எரிந்தது: பராமரிப்பு இல்லை என மக்கள் குற்றச்சாட்டு

2017-08-13@ 00:25:45

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து குப்பை ஏற்றிக்கொண்டு பெருங்களத்தூர் நோக்கி சென்ற மாநகராட்சி லாரி திடீரென தீப்பிடித்து  எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து குப்பை ஏற்றிக்கொண்டு மாநகராட்சிக்கு சொந்தமான லாரி ஒன்று, நேற்று மாலை பெருங்களத்தூர் குப்பை கிடங்கு  நோக்கி சென்று கொண்டு இருந்தது. மேற்கு வங்கத்தை சேர்ந்த டிரைவர் முன்னக் (27)  என்பவர் லாரியை ஓட்டினார். ஜெய் நகர் பார்க் அருகே  சென்றபோது திடீரென லாரியின் இன்ஜின் பகுதியிலிருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு,  கீழே குதித்து தப்பி ஓடினார்.

தகவலறிந்து கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் லாரியின் இன்ஜின் பகுதி முழுவதும்  எரிந்து நாசமனது.
 இதுபற்றி  கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் குப்பை அள்ளும் லாரிகளை முறையாக பராமரிப்பது இல்லை. ‘‘குப்பை  வண்டிதானே’’ என்று மெத்தனமாக இருந்து விடுகின்றனர். சாலையில் செல்லும்போது ஏற்பட்ட தீ விபத்து, போக்குவரத்து மிகுந்த பகுதியில் ஏற்பட்டு  இருந்தால், பக்கத்தில் நிற்கும் வாகனங்களுக்கும் தீ பரவி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்ற  வாகனங்களை பரிசோதிப்பது போல் ஆண்டுக்கு ஒருமுறை அரசாங்க வாகனங்களையும் பரிசோதிக்க வேண்டும்’’ என்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2018

    26-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-02-2018

    25-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • jeyalalithabdystatue

    ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முழுஉருவ வெண்கல சிலை திறப்பு

  • SouthAfricaCapitalWater

    உச்சக்கட்ட வறட்சியை தொட்ட கேப் டவுன் நகரம்: தண்ணிரின்றி வறண்டு கிடக்கும் நிலங்கள்

  • somalia_bomb_blast

    சோமாலியாவில் இரட்டைக் கார் குண்டு தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X