SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம் காதலனின் நண்பன் சுற்றி வளைத்து கைது

2017-08-13@ 00:25:44

ஆலந்தூர்: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் நகூரா (29) ஆதம்பாக்கம், பெரியார் நகர் 9வது தெருவில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு தனியாக  வசிக்கிறார். பம்மல் சங்கர் நகரில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்க்கிறார். கடந்த 6ம் தேதி நள்ளிரவில் நகூரா வீட்டில் நுழைந்த மர்மநபர், கத்தி  முனையில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினார்.
புகாரின்படி ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் அரை டிராயர் அணிந்து கொண்டு  சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், பெண்ணின் வீட்டிலிருந்து வெளியேறியது பதிவாகியிருந்தது. இதைதொடர்ந்து போலீசார், கேமராவில் பதிவான  உருவத்தை வைத்து தீவிரமாக விசாரித்தனர்.

அதில், கடந்த 6 மாதத்துக்கு முன், கே.கே நகர் அருகே நெசப்பாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் நகூரா வேலை பார்த்தபோது, அங்கு வேலை  செய்யும் சபீர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.இதையடுத்து, பம்மலில் உள்ள பியூட்டி பார்லரில் நகூரா வேலைக்கு சேர்ந்தார். அப்போதும் அவரது காதல் தொடர்ந்தது. இதற்கிடையில், நெசப்பாக்கம்  பியூட்டி பார்லரில் பணிபுரியும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மன்சூர்அலி என்பவரும், சபீரும் நண்பர்கள் ஆனார்கள்.

சபீர், தனது காதலியை பார்க்க அடிக்கடி ஆதம்பாக்கம் வீட்டுக்கு வருவார். அப்போது மன்சூர்அலி, தனது பைக்கில் அவரை கொண்டு வந்து இளம்பெண்  வீட்டின் அருகே விட்டு செல்வது வழக்கம். சம்பவத்தன்று நகூரா வீட்டுக்கு சென்ற மன்சூர்அலி, அவரை பாலியலுக்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர்  மறுக்கவே, கத்திமுனையில் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், நெசப்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த மன்சூர்அலியை நேற்று காலை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர்  அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-10-2017

    23-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • denguefeverdmkchennai

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

  • vinayagar_parisuthhh

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ஸ்ரீகாந்த் பரிசுகள் வழங்கினார்

  • EuropeTeeth

    9.7 மில்லியன் ஆண்டுகள் பழமையான பற்கள் கண்டுபிடிப்பு: மனித இனம் முதலில் ஐரோப்பாவில் தோன்றியதற்கான சான்றா?

  • Policecommemorationdayparade

    காவலர் வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு: நாடு முழுவதும் உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்